Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரஜினி பட நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம்.. உடலில் இப்படியொரு பிரச்சனையா? | Actor Sarath Babu

Nandhinipriya Ganeshan Updated:
ரஜினி பட நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம்.. உடலில் இப்படியொரு பிரச்சனையா? | Actor Sarath BabuRepresentative Image.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சரத் பாபு (71 வயது). 1973 ஆம் ஆண்டு 'ராம ராஜ்ஜியம்' என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சரத் பாபு, மறைந்த இயக்குநர் பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் (1977) என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 

இவர் சுமார் 40 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்ததையடுத்து சரத் பாபு தமிழ் சினிமாவில் பிரபலமானர். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல், இந்தி, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் சரத் பாபு நடித்திருக்கிறார். 

சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் சரத் பாபு நடித்திருகிறார். சமீபத்தில் பாபிசிம்ஹா நடிப்பில் வெளியான வசந்த முல்லை படத்திலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சரத் பாபு, திடீர் உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், உடல் நிலை மிக மோசமாக இருப்பதால் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்