Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆதிபுருஷ் டீமை 50 டிகிரி செல்சியஸில் எரிக்க வேண்டும் - ஆத்திரத்தில் சக்திமான் முகேஷ் கண்ணா

Aruvi Updated:
ஆதிபுருஷ் டீமை 50 டிகிரி செல்சியஸில் எரிக்க வேண்டும் - ஆத்திரத்தில் சக்திமான் முகேஷ் கண்ணாRepresentative Image.

மும்பை: ஆதிபுருஷ் பட டீமை 50 டிகிரி செல்சியஸில் எரிக்க வேண்டும் என சக்திமான் நாடகத்தில் நடித்த முகேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார்.

ராமாயணத்தை அடிப்படையாக வைத்து படம் ஆதிபுருஷ் உருவாக்கப்பட்டிருக்கிறது. ராமராக பிரபாஸ், ராவணனாக சைஃப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோனி நடித்திருக்கின்றனர். படம் பான் இந்தியா படமாக கடந்த 16ஆம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு படம் பார்க்க ரசிகர்கள் சென்ரன. ஆனால் கிராஃபிக்ஸ் காட்சிகளோ ரொம்பவே மோசமாக அமைந்து விட்டதென்று ரசிகர்கள் ஓபனாகவே கூறினர்.

ஓரிரு இடங்களில் பின்னணி இசை மட்டுமே ஆறுதல் அளிக்கிறது. கார்ட்டூன் சேனல் பார்ப்பது போல் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளங்களில் சிலரோ பிரபாஸ் பார்ப்பதற்கு ராமர் போல இயேசுநாதர் போல இருக்கிறார் என கூறி மீம்ஸ்களையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

படத்துக்கு ஒருபக்கம் எதிர்ப்பும் வலுத்துவருகிறது. சீதை தொடர்பான வசனம், அனுமன் ராவணன் பற்றி பேசும் வசனம் போன்றவைகளுக்கு எதிர்ப்புகள் வலுத்திருக்கின்றன. படத்தை தடை செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதப்பட்டிருக்கிறது. நேபாளத்தில் படத்துக்கு தடையும் விதிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் 90ஸ் கிட்ஸ்களுக்கு ஃபேவரைட்டான சக்திமான் நாடகத்தில் நடித்த முகேஷ் கண்ணா ஆதிபுருஷ் குறித்து காட்டமாக பேசியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், நமது வேதத்தை இழிவுப்படுத்தும் உரிமையை கொடுத்தது யார்?. ஓம் ராவத்தும், மனோஜ் முண்டாஷிரும் ராமாயணம் படிக்காதவர்கள் என்று எனது சேனலில் சொல்லியிருக்கிறேன். இவர்கள் எடுத்திருப்பது முற்றிலும் குப்பை.

அவர்களை மன்னிக்கவே கூடாது.  இவ்வளவு நடந்த பிறகும் அவர்கள் வெளியில் வந்து விளக்கம் தருகிறார்கள். ஆதிபுருஷ் டீமை 50 டிகிரி செல்சியஸில் எரிக்க வேண்டும். சனாதன தர்மத்துக்காக இதை செய்கிறோம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். உங்களது சனாதன தர்மம் எங்களிடமிருந்து வேறுபட்டதா என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்