Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

பெட்ரூமிலிருந்து ஃபோட்டோ வெளியிட்ட அனிகா.. உருகும் ரசிகர்கள்

Aruvi Updated:
பெட்ரூமிலிருந்து ஃபோட்டோ வெளியிட்ட அனிகா.. உருகும் ரசிகர்கள்Representative Image.

சென்னை: நடிகை அனிகா பெட்ரூமிலிருந்து வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.

கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அறிமுகமானவர் அனிகா. அதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரால் ரசிக்கப்பட்டது. குறிப்பாக க்ளைமேக்ஸில் அவருக்கும், அஜித்துக்குமான காட்சி பலரையும் கலங்க வைத்தது.

இந்தச் சூழலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா புட்டபொம்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனையடுத்து மலையாளத்திலும் ஹீரோயினாக களமிறங்கிய அவர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் நடித்தார். படத்தில் கவர்ச்சி காட்டினாலும் படத்தின் கதையில் பல சிக்கல்கள் இருந்ததன் காரணமாக ஓ மை டார்லிங் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதனையடுத்து அவர் தற்போது மலையாளத்தில் மாலு என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

அதேபோல் அவர் தமிழில் பிடி சார் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இவை தவிர சில படங்களில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.

ஆக்டிவ் அனிகா: இதற்கிடையே சினிமாவில் நடிப்பதோடு மட்டுமின்றி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டும் ஆக்டிவ்வாக இருந்துவருகிறார் அவர். அனிகா பதிவிடும் புகைப்படங்களில் கவர்ச்சி கொஞ்சம் ஓவராகவே இருப்பது வழக்கம். அதனால் ரசிகர்கள் அதனை ட்ரெண்டாக்குவதும் நடந்துவருகிறது.

அந்தவகையில் அனிகா சுரேந்த்ர தனது பெட் ரூமில் இருந்தபடி சில புகைப்படங்களை தனது இன்ஸாகிராமில் பதிவிட்டிருக்கிறார். ஊதா நிற உடை அணிந்திருக்கும் அந்தப் புகைப்படங்களில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் அவற்றை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்