Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் விஷால்?... அவரே சொன்ன பரபரப்பு விளக்கம்! 

KANIMOZHI Updated:
அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் விஷால்?... அவரே சொன்ன பரபரப்பு விளக்கம்! Representative Image.

சினிமாவில் மட்டுமே போட்டியிடுவேன் அரசியலில் போட்டியிட மாட்டேன் திருப்பதியில் நடைபெற்ற லத்தி திரைப்பட அறிமுக விழாவில் நடிகர் விஷால்

திருப்பதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடிகர் விஷால் நடித்த 22ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாக  உள்ள லத்தி திரைப்படத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் பங்கேற்று மாணவர்களிடம் பேசினார். 

இதனை அடுத்து செய்தியாளரிடம் பேசிய நடிகர் விஷால் 18 ஆண்டுகளாக திரை துறையில் ரசிகர்கள் பேராதரவுடன் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறேன். தற்பொழுது நடித்துள்ள லத்தி திரைப்படம் காவலர்களின் உண்மை நிலையை விவரிக்கும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் நாடு முழுவதும் உள்ள அனைத்து காவலர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். 

ஏற்கனவே இந்த படத்தின் அறிமுக விழா தமிழ்நாடு, கர்நாடகாவில் முடிந்துள்ள நிலையில் தற்போது ஆந்திரா,  தெலுங்கானாவில் ரசிகர்களை சந்தித்து  வருகிறேன். அவ்வாறு திருப்பதியில் இன்று அறிமுக விழா நடைபெற்றது. இந்த திரைப்படம் வெளியான 45 நாட்கள் தியேட்டரில் ரசிகர்கள் பார்க்கும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாய் ஒதுக்கி வைத்து விவசாயிகள் நலனுக்காக செலவிடப்படும்.

இது தவிர இளம் பெண்கள் படிப்பிற்காக எனது அறக்கட்டளையின் மூலமாக தொடர்ந்து பல்வேறு உதவிகள் செய்து வருகிறேன் என அவர் தெரிவித்தார். இதனை அடுத்து குப்பம் தொகுதியில் போட்டியிடுவதாக வந்த தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு குப்பம் தொகுதியில் எனது தந்தை வியாபாரம் செய்து வந்தார். அதன் காரணமாக சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மூன்று ஆண்டுகள் அங்கு தங்கியிருந்து வியாபாரம் செய்திருந்தேன்.

எனவே குப்பம் தொகுதியில் ஒவ்வொரு வீதியும்,  அங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் எனக்கு தெரியும்.  ஆனால் நான் அரசு தேர்தலில் போட்டியிடவில்லை ஜெகன்மோகன் என்றால் எனக்கு மிகவும் அபிமானம் அவ்வளவு தான். அரசியலில் இருந்து எம்எல்ஏவாக பொதுமக்களுக்கு சேவை செய்வதை விட தற்பொழுது சினிமாவில் நல்ல கதை மற்றும் படங்கள் வருகிறது.

எனவே சினிமாவில் போட்டியிட்டு அதில் ரசிகர்களை திருப்திப்படுத்தி என்னால் முடிந்த சமூக சேவையை எனது அறக்கட்டளை மூலம் செய்து வருகிறேன்.  தற்போதைய நோக்கம் எனவே அரசியலில் போட்டியிடுவதில்லை  சினிமாவில் மட்டுமே போட்டியிடுவேன் என அவர் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்