Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜஸ்ட் மிஸ்.. நூலிழையில் உயிர் தப்பிய விஷார்.. பதைபதைக்க வைக்கும் விபத்து வீடியோ!

Nandhinipriya Ganeshan Updated:
ஜஸ்ட் மிஸ்.. நூலிழையில் உயிர் தப்பிய விஷார்.. பதைபதைக்க வைக்கும் விபத்து வீடியோ!Representative Image.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் எஸ்.கே.சூரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மார்க் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துவரும் இப்படத்திற்கு அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு பணிகளை வருகின்றனர்.  இந்த நிலையில், இன்று படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, படப்பிடிப்பில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தபோது, படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக, படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்தது.

வாகனம் அதிவேகமாக வருவதை கவனித்த தொழிற்நுட்ப கலைஞர்கள், சுதாரித்துக்கொண்டு அலறி அடித்துக்கொண்டு ஓடிவிட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த நிலையில், நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த விபத்து நடந்த வீடியோவை ஷேர் செய்து, ஜஸ்ட்டு மிஸ்.. சில அங்குலங்களில் உயிர் தப்பினேன், எல்லாம் வல்ல கடவுளுக்கு நன்றி. தற்போது மீண்டும் ஷூட்டிங் திரும்பியுள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்