Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் அப்டேட் கேக்கும் அஜித் ரசிகர்கள்...இவங்களையும் விட்டு வைக்கலயா...!

madhankumar July 25, 2022 & 19:46 [IST]
ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் அப்டேட் கேக்கும் அஜித் ரசிகர்கள்...இவங்களையும் விட்டு வைக்கலயா...!Representative Image.

தயாரிப்பாளர் போனிகபூருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த அஜித் ரசிகர்கள் AK 61 அப்டேட் வாங்கி தாருங்கள் என கூறி கமெண்ட் செக்சனில் காத்துக்கிடக்கின்றனர்.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதி சமீபத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர், இதனையடுத்து இருவரும் தனித்தனியாக தங்களது பாதையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அதிகப்படியான வரி செலுத்தியதற்காக வழங்கப்பட்ட தெஸ்பியன் விருதினை ரஜினிகாந்த் சார்பில் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் தயாரிப்பாளர் போனிகபூரை அவரது இல்லத்தில் சந்தித்த ஐஸ்வர்யா அது குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார், அதற்கு கேப்ஷனாக “இந்த மாலைப்பொழுதில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு சிறு வயது நியாபகங்களையும் பப்பி அக்காவைவும் (ஸ்ரீ தேவி) நி.னைவூட்டுகிறது.” என்று குறிப்பிட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல், சுவாரஸ்யமான கதையையும் பகிர்ந்துள்ளதாக தனது ட்வீட்டின் மூலமாக தெரிவித்துள்ளார்.

இதனைப்பார்த்த அஜித் ரசிகர்கள் அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துவரும் AK 61 படத்தின் அப்டேட் கேட்டு சூழ்ந்துள்ளனர். அது போதாதென்று ரஜினி ரசிகர்களும் நீங்கள் என்ன கதையை பற்றி விவாதித்தார்கள் அதை நீங்கள் இயக்கப்போகிறீர்களா? ரஜினி அதில் நடிக்கப்போகிறாரா? போனிகபூர் தயாரிக்கப்போகிறாரா? என அடுக்கடுக்காக கேள்விகளை தொடுத்து வருகின்றனர். ஆனால் அதுகுறித்த தகவல் ஒன்றும் வெளியாகவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்