Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ரூபாய் நோட்டில் அஜித் படம்.? மாஸ் காட்டும் ரசிகர்கள்..!!

Sekar Updated:
ரூபாய் நோட்டில் அஜித் படம்.? மாஸ் காட்டும் ரசிகர்கள்..!!Representative Image.

அஜித் ரசிகர்கள் ஒரிஜினல் ரூபாய் நோட்டு போல், அஜித் படத்துடன் முதல் நாள் காட்சிக்கு டிக்கெட் அடித்து விநியோகம் செய்து வைரலாகி உள்ளனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு ஆகிய இரு படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வர உள்ளன. 

தமிழ் சினிமாவில் அஜித்தும் விஜயும் நேரடி போட்டியாளர்களாக அவர்களது ரசிகர்களால் பார்க்கப்படுவதால், இரு தரப்பு ரசிகர்களும் தங்கள் தரப்பின் பராக்கிரமத்தை காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், கட் அவுட் வைப்பது போன்ற வழக்கமான செயல்களையெல்லாம் தாண்டி பொள்ளாச்சியில் உள்ள தியேட்டர் ஒன்றில், ஒரிஜினல் ரூபாய் நோட்டை போல், நடிகர் அஜித்துடன் துணிவு படத்தின் முதல் நாள் ரசிகர் காட்சிக்கான டிக்கெட்டுகளை அடித்து விநியோகம் செய்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்களின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்