Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

ஜனவரி 11ல் வெளியாவதில் திடீர் சிக்கல்! வாரிசு படக்குழு விளக்கம்

UDHAYA KUMAR Updated:
ஜனவரி 11ல் வெளியாவதில் திடீர் சிக்கல்! வாரிசு படக்குழு விளக்கம்Representative Image.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் படம் வாரிசு. இந்த படம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படம் குறிப்பிட்ட நாளில் வெளியாவதில் சிக்கல் இருப்பது தெரியவந்துள்ளது. போட்டிக்கு வரும் படங்களாலும் பண்டிகைக்கு முன்பே வெளியிடுவதிலும் சில சிக்கல் இருப்பதை தெரிவித்துள்ளது வாரிசு படக்குழு. 

தமிழ் பதிப்பான வாரிசு படம் சொன்ன தேதியில் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் ஆனால் தெலுங்கு பதிப்பான வாரசுடு ஜனவரி 14ம் தேதிதான் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

தயாரிப்பு தரப்பிலிருந்து வந்த தகவலின்படி, இந்த தகவல் உண்மைதான் என்கிறார்கள். ஜனவரி 11ம் தேதியே வெளியிட்டால் படத்தின் வசூல் பாதிக்கப்படும். பண்டிகை தினங்களில் வெளியிடவேண்டும் என்பதால் ஜனவரி 14ம் தேதி வெளியிடவுள்ளனர். அதுமட்டுமின்றி போட்டிக்கு நேரடி தெலுங்கு படங்களும் வரவுள்ளதால், வாரசுடு படத்தின் வசூல் பாதிக்கும். இதனாலேயே ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என தெரிகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்