Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய்யை விட இருமடங்கு வசூல்... அஜித்தின் துணிவு சக்சஸ்!

UDHAYA KUMAR Updated:
விஜய்யை விட இருமடங்கு வசூல்... அஜித்தின் துணிவு சக்சஸ்!Representative Image.

அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு படம், விஜய்யின் வாரிசு படத்தை விட அதிக வசூல் செய்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் 3வது படம் துணிவு. மூன்றாவது முறையாக இந்த கூட்டணியில் இருக்கிறார் அஜித்குமார். இந்த படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்ட போதே இது தனது முந்தைய படங்களின் வசூலை முறியடிக்க வேண்டும் என்கிற எண்ணத்திலேயே இருந்தார் அஜித். முக்கியமாக ஒரே நாளில் வெளியாகும் வாரிசு படத்தை விட வசூலில் சாதனை படைக்க திட்டமிட்டது படக்குழு. 

விஜய் இந்த முறை வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தை பொங்கலுக்கு விருந்தாக படைத்துள்ளார்.  தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இதனை தயாரித்துள்ளார். அஜித் படமும் இதே நாளில் வெளியாவதால் அந்த படத்தை ஓவர்டேக் செய்து வசூலில் முந்தி இருக்க வேண்டும் என வாரிசு படக்குழுவும் திட்டமிட்டது. 

ஜனவரி 11ம் தேதி அதிகாலை 1 மணிக்கு துணிவு படமும் அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் வெளியாகியது. நள்ளிரவு முதலே இந்த இரு படங்களின் ரசிகர்களும் காத்து நின்றனர். படமும் வெளியாகியது. துணிவு படத்துக்கு நல்ல விமர்சனமும் வாரிசு படத்துக்கு கலவையான விமர்சனமும் வெளியாகியது. விஜய் ரசிகர்களே இரண்டு மாதிரியாக பேசினர். சிலர் வாரிசு பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தனர். 

நேற்றைய நாள் முடிவில் இரண்டு படங்களின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. இதில் துணிவு அதிக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை எதுவும் நம்பமுடியாது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்