Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

AK 61 பஸ்ட் லுக் வெளியீடு எப்போது...வெளியானது சூப்பர் அப்டேட்...அஜித் ரசிகர்கள் குஷி..!

madhankumar July 06, 2022 & 12:59 [IST]
AK 61 பஸ்ட் லுக் வெளியீடு எப்போது...வெளியானது சூப்பர் அப்டேட்...அஜித் ரசிகர்கள் குஷி..!Representative Image.

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் ஹச்.வினோத் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத "ஏகே 61" படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் மூலம் ஹச். வினோத், அஜித், போனிகபூர் ஆகியோர் மூண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. அதில் வில்லனாக அஜித்தே நடித்துள்ளார். தற்போது கிடைத்துள்ள தகவலில் படி படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதாகவும் அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தின் டைட்டிலும், பஸ்ட் லுக் போஸ்டரும் அஜித் பிறந்தநாளான மே 1 அன்று வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அனால் மிஞ்சியது என்னவோ ஏமாற்றம் தான். இந்நிலையில் படம் குறித்த புதிதான தகவல் ஒன்று பரவி வருகிறது, அது வேறு ஒன்றுமில்லை படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் குறித்துதான். வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் தான் ஆகஸ்ட் 13. நடிகர் அஜித்தும் ஸ்ரீதேவி மீது அதிகம் மரியாதை வைத்திருந்தார், அவரது இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் சம்பளம் வாங்காமல் கூட நடித்து கொடுத்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதனால் தற்போது அஜித் ரசிகர்கள் ஆகஸ்ட் 13ம் தேதிக்காக காத்திருக்க தொடங்கி இருக்கிறார்கள். 

மேலும் படப்பிடிப்பில் இருந்து சற்று ஓய்வு பெற்று ஐரோப்பிய நாடுகளில் பைக் பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித் இந்த மாத இறுதியில் இந்திய திரும்பி படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்