Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,158.16
-181.28sensex(-0.24%)
நிஃப்டி22,523.75
-46.60sensex(-0.21%)
USD
81.57
Exclusive

AK 62 Official Update | அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஏகே 62 படத்தின் டைட்டில் இதுதானாம்..

Nandhinipriya Ganeshan Updated:
AK 62 Official Update | அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஏகே 62 படத்தின் டைட்டில் இதுதானாம்.. Representative Image.

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் துணிவு. அதைத்தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள படம் ஏகே 62. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த ஏகே 62 படம் பின்பு மகிழ் திருமேனி வசம் போனது. மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க கமிட்டாகி 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த படம் குறித்த எந்த அதிகார்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை.

இவ்வளவு நாட்கள் அமைதியாக காத்திருந்த ரசிகர்களுக்கு லைகா நிறுவனம் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிடவுள்ளது. அதுவும் ஒன்றல்ல அடுத்தடுத்த இரண்டு அப்டேட்டுகள் வெளியாக உள்ளன. அதாவது, நடிகர் அஜித் தனது 52வது பிறந்தநாளை மே 1 ஆம் தேதி கொண்டாட உள்ளது. அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தான் ஏகே 62 படத்தின் அப்பேட்டை படக்குழு வெளியிடுகிறது.

அதன்படி, இன்று 6 அல்லது நள்ளிரவு 12 மணிக்கு ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்போடு, அப்படத்தின் டைட்டிலையும் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. இந்த படத்துக்கு 'விடா முயற்சி' என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக அரசல்புரசலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டைட்டிலை போஸ்டர் மூலம் வெளியிட உள்ளார்களா அல்லது லியோ பட மாதிரி டீசர் மூலம் வெளியிட உள்ளார்களா என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை. இதோடு இன்னொரு அப்டேட்டும் வெளியாக உள்ளது. அதாவது, ஏகே 62 படத்தின் ஷூட்டிங் மே மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் மகிழ் திருமேனி. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்