Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அஜித்குமாருக்கு வரம் தரும் சிறுத்தை சிவா!

UDHAYAKUMAR September 06, 2022 & 18:00 [IST]
அஜித்குமாருக்கு வரம் தரும் சிறுத்தை சிவா!Representative Image.

மீண்டும் சிறுத்தை சிவாவுடன் அஜித்குமார் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களைத் தொடர்ந்து ஐந்தாவது படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். 

அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஹெச் வினோத்துடன் சேர்ந்து ஏகே 61 திரைப்படம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கி மொத்த படத்தின் படப்பிடிப்பும் முடிந்து வரும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்த படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் புதிய படம் ஒன்றில் நடிப்பார் என கூறப்படுகிறது. 

சிறுத்தை சிவா இயக்கும் அந்த படத்துக்கு வரம் என்று பெயர் வைத்திருப்பதாகவும் தகவல் அரசல் புரசலாக வெளிவந்துள்ளது. ஆனால் இது உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. காரணம் அஜித் தற்போது நடித்து வரும் படத்துக்கே இன்னமும் பெயர் வைக்கவில்லை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்