Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான் மகள்.. அதுவும் இந்த படத்துக்கா? | AR Rahman Daughter

Nandhinipriya Ganeshan Updated:
இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான் மகள்.. அதுவும் இந்த படத்துக்கா? | AR Rahman DaughterRepresentative Image.

திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றாலே தனி சிறப்பு உண்டு. இசையோடு மட்டுமல்லாமல், அவருடைய குரலுக்கும் நம்மில் பலரும் அடிமை என்றே சொல்லலாம். அன்று முதல் இன்று வரை மவுஸு என்பதே குறையாத ஏ.ஆர்.ரஹ்மானுக்கு போட்டியாகவே அவருடைய மகன் மற்றும் மகள் திரையுலகில் தங்களுடைய திறமைகளை நிரூபித்து வருகிறார்கள்.

அதன்படி, ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் ஒரு பாடகராக வலம் வருகிறார். இந்த நிலையில், பாடகியும் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளுமான கதீஜா ரஹ்மான் இப்போது இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். அதாவது, சில்லு கருப்பட்டி, பூவரசம் பீப்பீ, ஏலே உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக இருப்பவர் இயக்குனர் ஹலிதா ஷமீம்.

தற்போது, இவர் 'மின்மினி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த திரைப்படத்திற்கு தான் கதீஜா இசையமைக்க உள்ளார். இதை சமீபத்தில், இயக்குனர் ஹலிதா ஷமீம் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அதில் கதீஜா திறமையான மனிதர் என்றும் சிறப்பான இசை வந்துகொண்டிருப்பதாகவும் ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 'புதிய மனிதா...' (எந்திரன்), 'காயம்...' (இரவின் நிழல்), 'சின்னஞ்சிறு...' (பொன்னியின் செல்வன் 2) ஆகியவை கதீஜா ரஹ்மான் பாடிய பாடல்களில் சில.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்