தமிழ் சினிமாவில் ஆக்ஷன் பிளாக் குடும்ப திரைப்படம் கொடுப்பதில் ஹரிக்கு நிகர் ஹரிதான். சூர்யாவுடன் ஏற்பட்ட பிரச்னையால் சில ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த ஹரி, தற்போது அருண் விஜய் நடிப்பில் யானை திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
அருண்விஜய், ப்ரியா பவானிஷங்கர், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் கிராமத்து குடும்பத்தின் வாழ்வு, சோகம், மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் விதமாக அமையும் என கூறப்படுகிறது. மேலும் தூத்துக்குடி பகுதியின் ஸ்லாங்கில் அழகான கதையம்சத்தில் உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆக்ஷன் நிறைந்த காட்சிகள், குடும்ப பாசம், சண்டை, மகிழ்ச்சி, சோகம், அழுகை என அனைத்தும் கலந்த படமாக அமைகிறது. கிராமத்து ஆளாக அருண்விஜய் அசத்தியுள்ளார். ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் இந்த படத்தின் கதை எழுதப்பட்டிருக்கும் என தெரிகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…