Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

avatar 2 இமாலய சாதனையில் புரளும் படக்குழு...! எத்தனை ஆயிரம் கோடிகள் தெரியுமா?

UDHAYA KUMAR Updated:
avatar 2 இமாலய சாதனையில் புரளும் படக்குழு...! எத்தனை ஆயிரம் கோடிகள் தெரியுமா?Representative Image.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வசூல் மழை பொழிந்து கொண்டு இருக்கிறது. 

2009ம் ஆண்டு வெளியான அவதார் படத்தின் ஐடியாவை மட்டும் வைத்துக் கொண்டு புதிய கதை ஒன்றை கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முடிவு செய்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன். அதை டிஜிட்டலில் பிரம்மாண்டமாக கொண்டு வர முயன்று கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோடி பொருட்செலவு செய்து படத்தை எடுத்திருக்கிறார்கள். 

அவதார் படம் வெளியான முதல் ஷோ விலேயே உலகம் முழுக்க 100 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. பின்னர் மூன்று நாளிலேயே 500 கோடியை வசூலித்தது. இதனைத் தொடர்ந்து 1000, 2000 என கடந்து இப்போது வரை 4200 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என உலகம் முழுக்க 160 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த படம் விரைவில் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலுக்கும் என்று கூறுகின்றனர் சினிமா வியாபாரம் அறிந்தவர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்