Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அவதார் 2 ரிலீஸ் ஆகாததற்கு இதுதான் காரணமாம் | Avatar 2 not released in Tamil Nadu

UDHAYA KUMAR Updated:
அவதார் 2 ரிலீஸ் ஆகாததற்கு இதுதான் காரணமாம் | Avatar 2 not released in Tamil NaduRepresentative Image.

தமிழகத்தில் பல திரையரங்குகளில் அவதார் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பே காரணம் என்றும் அதிக விலை கேட்டதால் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சில திரையரங்குகளில் மட்டும் அவதார் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதனால் தமிழக ரசிகர்கள் அப்செட் ஆகி இருக்கிறார்கள். 

படம் ரிலீஸ் தேதி அறிவித்ததிலிருந்தே பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தார்கள். அமெரிக்காவில் சில இடங்களில் பிரிமியர் ஷோக்களிலிருந்து ரிவியூ வெளியாகி படம் பட்டைய கிளப்பியிருக்கிறது. விஷுவலாக பெரிய ட்ரீட் காத்திருக்கிறது என தகவல் கிடைத்ததும் தமிழகத்தில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம். 

உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியாகியுள்ள அவதார் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட பல திரையரங்கு உரிமையாளர்களுக்கு விருப்பம் இல்லை. அதற்கு காரணம் டிஸ்னி ஸ்டூடியோஸ் 70:30 என்கிற ரீதியில் வசூல் பணத்தைக் கேட்பதால்தான் என்கிறார்கள். 

குறிப்பாக, அதிகாலை காட்சிக்கு தமிழ்நாட்டில் அவதார் 2 திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், சென்னையின் பிரபல திரையரங்குகளான வெற்றி தியேட்டர், ஜிகே சினிமாஸ், ஏஜிஎஸ் சினிமாஸ் உள்ளிட்டவை படத்தின் அதிகாலை காட்சியை திரையிடவில்லை. இவை அனைத்தும், அவதார் 2 படத்தை திரையிடும் என கூறியிருந்தன. பின்னர் ஏஜிஎஸ் மட்டுமே படத்தை திரையிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்