Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் படத்துக்கு பிரச்சனை வரணும் அப்போதான்... நடிகர் பார்த்திபன் அதிரடி கருத்து! 

KANIMOZHI Updated:
விஜய் படத்துக்கு பிரச்சனை வரணும் அப்போதான்... நடிகர் பார்த்திபன் அதிரடி கருத்து! Representative Image.

விஜய் போன்ற நடிகர்களின் படங்களுக்கு பிரச்சனை வந்தால் தான் படம் பிரபலமாகும் என பிரபல நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட திரைப்பட விழாதான் எனக்கான திருவிழா. எனது ஆரம்பமே இங்கிருந்து தொடங்கியதுதான். இதுவரை மூன்று தேசிய விருது வாங்கிவிட்டேன். ஆனாலும் எனது ஆசை அடங்கவில்லை. இரவின் நிழல் பட்டத்திற்கு இதுவரை 114 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் என்னுடைய இரவின் நிழல் திரையிடுவது மிகவும் பெருமையான விஷயம் என்றார். 

உதயநிதியை வாரிசு என்ற காரணத்திற்காக மட்டுமே ஒதுக்கக் கூடாது. அவரிடம் அவரது தாத்தாவிடம் உள்ள திறமை ஒரு பகுதி அவரிடம் உள்ளது. உயர்ந்த பதவிக்கு செல்லும்போது ஒரு முடிவு எடுத்துத்தான் ஆக வேண்டும். பெண் சக்தி எவ்வளவு சக்திவாய்ந்தது என்பது குறித்து ஒரு படம் எடுக்க உள்ளேன் எனத் தெரிவித்தார். பணிகள் நடைபெற்று வருகிறது. 

என் இரவின் நிழல் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் தமிழகம் முழுவதும் வெளியிட்டது. மிகச் சரியான கணக்கு வந்தது. திரையரங்குகளில் இருந்து வரவேண்டிய பணம் உடனே கிடைக்கிறது. உதயநிதி அதிகாரத்திற்கு வந்தபிறகு நல்ல காரியம் நடந்துள்ளது. உதயநிதிக்கு வாய்ப்பு கொடுத்து ஊக்குவித்தால் தமிழகத்தில் நிச்சயம் ஒரு சிறந்த அமைச்சராக வருவார் எனத் தெரிவித்தார். 

விஜய் போன்ற நடிகர்களின் படங்களுக்கு பிரச்சினை வந்தால்தான் படமும் பிரபலமாகும். இதை எல்லாம் தாண்டி வருவதே ஒரு ஹீரோயிஸம்தான். வாரிசு படத்தை நான்‌முதலில் பார்ப்பேன்‌ என்று சொல்வதற்கே ஒரு துணிவு வேண்டும். ஓடிடியிலும் பெரிய படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. சினிமா திரையரங்குகளின் கையில் இருந்த சினிமா தற்போது ஓடிடி வசம் சிக்கிவிட்டது.

சிறிய பட்ஜெட் படங்களை எடுக்க வேண்டாம் என்று விஷால் சொன்னது. சிறிய படங்களை விற்பனை செய்யமுடியவில்லை என்ற வருத்தத்தில் சொல்லியிருக்கலாம். சின்ன படங்கள் தான் திரையுலகை மிகப் பெரிய இடத்திற்கு கொண்டு சொல்பவை. குறைந்த செலவில் நல்ல படங்கள் எடுக்க முடிந்தால் அதுதான் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். சின்ன படங்கள் தவிர்க்க முடியாதது அதுதான் சினிமாவுக்கான வளர்ச்சி எனத் தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்