Thu ,Feb 22, 2024

சென்செக்ஸ் 73,158.24
535.15sensex(0.74%)
நிஃப்டி22,217.45
162.40sensex(0.74%)
USD
81.57
Exclusive

Baakiyalakshmi May 31 Episode: கோபி கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ராதிகா.. உண்மை தெரிஞ்சி ராதிகா எடுக்கும் முடிவு... பாக்கியலட்சுமியில் உச்சக்கட்ட பரபரப்பு... 

Nandhinipriya Ganeshan May 31, 2022 & 16:15 [IST]
Baakiyalakshmi May 31 Episode: கோபி கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ராதிகா.. உண்மை தெரிஞ்சி ராதிகா எடுக்கும் முடிவு... பாக்கியலட்சுமியில் உச்சக்கட்ட பரபரப்பு... Representative Image.

Baakiyalakshmi May 31 Episode: பாக்கியலட்சுமி சீரியலில் எல்லாரும் ஆவலோடு காத்திருந்த தருணம் வரப்போகிறது. இதில் கோபியை வெறுப்பவர்களுக்கு ஒரு குலு குலு செய்தி. அதாவது ராதிகாவுக்கு எல்லா உண்மைகளும் தெரிய வரும் முக்கியமான எபிசோடு இன்று ஒளிப்பரப்பாக போகிறது. கோபியின் பித்தலாட்டம் கடைசியில் அவர் வாயிலேயே வெளி வந்துவிட்டது. மகா சங்கமத்தில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி குடும்பம் தான் கோபியின் உண்மை முகத்தை வெளியில் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் ராதிகாவிடம் போய் கோபி நல்லவர் இல்லை என சொல்ல, ராதிகாவுக்கு சந்தேகம் வந்து, கோபி குடும்பத்தை பற்றி விசாரிக்க கோபிக்கும் ராதிகாவுக்கும் சண்டை வெடிக்கிறது. 

இன்றைய எபிசோடில் (baakiyalakshmi 31.5 22 tamil), குடித்துவிட்டு ராதிகா வீட்டிற்கு சென்று தன்னை புரிந்துக் கொள்ளுமாறு கெஞ்சுகிறார், உடனே ராதிகா டிராமா போடாதீங்க கோபி என கோபமாக பேசுகிறார். உடனே ஆத்திரத்தில், எல்லா உண்மைகளையும் கொட்டுகிறார் கோபி. இனியா , செழியன், எழில் தான் என்னுடைய பிள்ளைகள், பாக்கியா தான் என் மனைவி என மொத்த உண்மையையும் கோபி சொல்லி விடுகிறார். பின்னர், தன்னுடைய மொபைல் போனில் பாக்கியா உடனிக்கும் போட்டாவையும் எடுத்து காண்பிக்கிறார். ராதிகாவுக்கு தலையில் இடி விழுந்தது போல் உள்ளது. என் குடும்பத்த பாக்கணும் பாக்கணும் சொன்னியே பாரு... நல்லா பாரு.. ராதிகா மொபைலை பார்த்த உடனே இடிந்து கீழுவிறார். 

இது எல்லாம் உனக்காகத்தான் மறைத்தேன். நீ என்னை விட்டுப் போயிடக் கூடாதுன்னு தான் மறைச்சேன் என கூறுகிறார். நான் அந்த குடும்பத்தோடு சந்தோஷமா இல்ல என்ன புரிஞ்சிக்கோ நீயும் மயூவும் தான் எனக்கு வேண்டும் என சொல்லி ராதிகாவின் கையை பிடித்து அழுகிறார் கோபி. உடனே ராதிகா நீங்க பொய் பொய் பொய் பேசுறீங்கனு கோபப்படுகிறார். இல்லை, என்னை புரிஞ்சிக்கோ நான் விருப்பம் இல்லாமல் பாக்கியாவுடன் வாழ்வதாக சத்தியம் செய்கிறார் கோபி. ஆனாலும் ராதிகா மனசு அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

ஆத்திரமடைந்த ராதிகா, கோபியை வீட்டை விட்டு வெளியே (baakiyalakshmi today episode) போகச் சொல்ல, நான் போக மாட்டேன், இங்க தான் இருப்பேன் இதுதான் என்னுடைய வீடு என சொல்கிரார் கோபி. அதை கேட்ட ராதிகாவு ஆத்திரத்தின் உச்சிக்கே போகிறார். பின்னர், கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதறி அழுகிறார் ராதிகா. ராதிகா வீட்டைவிட்டுத் அடுத்த நிலையில் காரில் வந்து நடுரோட்டில் நின்று புலம்பிக் கொண்டிருக்கிறார் கோபி.

இப்படி இருக்கையில், இங்கு வீட்டில் ரொம்ப நேரம் ஆகியும் கோபி வீட்டுக்கு வரவில்லையே என பாக்கியா தவிக்கிறார். அந்த சமயத்தில் கோபியின் நண்பர் பாக்கியாவுக்கு போன் செய்து கோபியை பற்றி விசாரிக்கிறார். என்ன விஷயம் ஏதாவது சொல்லனுமா சொல்லுங்க என கேட்க இல்ல அவன் ஃபுல்லா குடிச்சி இருந்தான் கார் ஓட்ட வேண்டாம் என்று சொல்லியும் அவன் கேட்காம கிளம்பி வந்துட்டான். அதுதான் வீட்டுக்கு வந்து விட்டானா என கேட்டு உங்களுக்கு போன் செஞ்சேன் என சொல்ல இன்னும் வரவில்லை என பாக்கியா கூறுகிறார். 

விஷயம் கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்கியா, வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என நினைத்து அமைதியாக இருக்கிறார். பிறகு எல்லோரும் படுக்கச் சென்று விட இனியாவையும் மேலே அனுப்பி வைக்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது. உண்மை எல்லாம் தெரிந்த பின்பு ராதிகா எடுக்க போகும் அதிரடி முடிவு என்ன? என்பது கதையின் அடுத்த கட்டம். ஆனால், இணையத்தில் வெளியாகும் தகவல்களின் படி, ராதிகா ரோல் நெகடிவ்வாக மாறும் என தெரிகிறது. இனிமேல் தான் சீரியலில் விறுவிறுப்பு (baakiyalakshmi upcoming story) கூடும்... பொருத்திருந்து பார்க்கலாம். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்