Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புகைப்பிடிக்கும் குழந்தை நட்சத்திரம்... அதிர்ச்சியில் கோலிவுட்!

UDHAYA KUMAR Updated:
புகைப்பிடிக்கும் குழந்தை நட்சத்திரம்... அதிர்ச்சியில் கோலிவுட்!Representative Image.

பேபி இப்படி பண்ணலாமா பேபி என தெய்வத் திருமகள் குழந்தை நட்சத்திரமான சாராவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அட நம்ம பேபி சாராவா இப்படி என அவர்கள் அதிர்ந்து போயி இருக்கிறார்கள். காரணம் அவர் புகைப்பிடிப்பது போல வந்த புகைப்படம்தான். 

தெய்வத் திருமகள் படத்தில் விக்ரமுடன் இணைந்து குழந்தை கதாபாத்திரத்தில் நச்சென நடித்திருப்பார் பேபி சாரா. பேபி இப்போது வளர்ந்து இளம் பெண்ணாக மாறி சினிமாக்களில் கதாநாயகி வேடத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் தமிழக ரசிகர்கள் அவரை இன்னமும் குழந்தையாகவே கருதி வருகின்றனர். 

அதற்கு அவரது குழந்தை முகமும் ஒரு காரணமாக இருக்கலாம். தெய்வத்திருமகள் படத்தில் அவரின் கதாபாத்திரம் கொடுத்த பாதிப்பாகவும் இருக்கலாம். 

தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் சாரா. இவர் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். விக்ரமின் சிறு வயது கதாபாத்திரம் ஜோடியாக அவர் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராயின் சிறு வயது கதாபாத்திரமான நந்தினியாக அவர் நடித்திருந்தார். 

நடிகை சாராவின் புகைப் பிடிக்கும் புகைப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வந்ததை பார்த்த ரசிகர்களுக்கு ஒரே அதிர்ச்சி. கொட்டேஷன் கேங் எனும் படத்துக்காக இப்படி நடித்திருக்கிறார். ஆனாலும் ரசிகர்களுக்கு ஒரு சிறுமி இப்படி நடிக்கலாமா என கவலை தெரிவித்து வருகின்றனர். படத்தில் இன்னும் பல காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் இருக்குமாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்