Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ப்ரீமியரில் சொல்லியடித்த பீஸ்ட்.. விக்ரமுக்கு ரெண்டாவது இடம்தான்...!

UDHAYA KUMAR November 03, 2022 & 13:27 [IST]
ப்ரீமியரில் சொல்லியடித்த பீஸ்ட்.. விக்ரமுக்கு ரெண்டாவது இடம்தான்...!Representative Image.

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் பீஸ்ட். தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் இதுதான். இந்த படத்துக்கு ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு இருந்தாலும், சில தினங்களில் நெகடிவ் விமர்சனங்கள் எழவே, படத்தை பலரும் கழுவி ஊற்றினர். ஆனாலும் சன் டிவி இந்த படத்தை தீபாவளி விருந்தாக முதல்முறை டிவியில் ஒளிபரப்பியது. 

சன்டிவிக்கு பீஸ்ட் என்றால், விஜய் டிவி வசம் சென்றது உலகநாயகனின் விக்ரம். இந்த படத்தின் முதல் டிவி பிரிமியர் ஷோ விஜய் தொலைக்காட்சியில் தீபாவளி தினத்தில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில், தீபாவளி திருநாளின் டிவி டிஆர்பி ரேட்டிங் பற்றிய தகவல்கள் வேக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. 

வழக்கமாக ஒரு வாரத்துக்கு பிறகே இம்ப்ரஸன்கள் வைத்து டிஆர்பி ரேட்டிங் தெரிய வரும் என்பது விசயம் அறிந்தவர்களுக்கு தெரியும். இப்போது பீஸ்ட் படம் ஒளிபரப்பாகும்போதுதான் ஒட்டுமொத்த தீபாவளி தினத்தில் ஒரு தொலைக்காட்சியின் அதிகபட்ச ரேட்டிங்காக பதிவாகியுள்ளது. 

பீஸ்ட் திரைப்படம் ஒளிபரப்பாகும்போது சன்டிவி 12.62 டிஆர்பி பெற்றுள்ளது. விஜய் டிவியில் விக்ரம் படம் ஒளிபரப்பாகும்போது 4.42 டிஆர்பி பதிவாகியுள்ளது. மேலும் டான் திரைப்படம் ஒளிபரப்பான சமயத்தில் 3.63 டிஆர்பி பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்