Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாரதி கண்ணம்மா 2 சீரியல் டுடே எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay Tv Bharathi Kannamma 2 Serial

Nandhinipriya Ganeshan Updated:
பாரதி கண்ணம்மா 2 சீரியல் டுடே எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay Tv Bharathi Kannamma 2 SerialRepresentative Image.

பாரதி கண்ணம்மா 2 சீரியல்: ஸ்டார் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான ​​பாரதி கண்ணம்மாவின் இரண்டாம் பாகமாகும். பிரவீன் பென்னட் இயக்கிய இந்த சீரியலை குளோபல் வில்லேஜர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சீரியலில் முதல் சீசனில் கண்ணம்மாவாக நடித்த வினுஷா தேவியும், ரோஜா சீரியல் புகழ் சிப்பு சூர்யனும் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். மேலும், ரூபா ஸ்ரீ மற்றும் தீபா சங்கர் துணை வேடத்தில் நடிக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான நெஞ்சங்களை கொள்ளையடித்த இந்த சீரியல் விஜய் டிவியில் 06 பிப்ரவரி 2023 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம். 

பாரதி கண்ணம்மா 2 சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

சிப்பு சூரியன்

பாரதி

வினுஷா தேவி

கண்ணம்மா, சித்ரா

ரேஷ்மா முரளிதரண்

ஒரிஜினல் கண்ணம்மா

தீபா சங்கர்

பாக்கியா

ரூபா ஸ்ரீ

சௌந்தர்யா

ராதா

ஷர்மிளா

குகன் சண்முகம்

விஜய்

உடுமலை ரவி 

செல்வம்

 ஃபரினா ஆசாத்

வெண்பா

ரேஷ்மா சர்மா

மது

ப்ரியங்கா தாஸ் / சாய் ரித்து

அஞ்சலி

அனுராதா கிருஷ்ணமூர்த்தி

நந்தினி

வி.ஜே.அண்ணாமலை

அகிலன்

ஷாதிகா

சாந்தி

 கேஎம்கே கைலாஷ்

தண்டபாணி

 

சிறப்பு தோற்றங்கள்:

  • இளம் கண்ணம்மாவாக லிஷா ராஜ்குமார்
  • இளம் அஞ்சலியாக சம்யுதா
  • இளம் வெண்பாவாக ஷெரின்
  • இளம் மதுவாக சஹஸ்ரா
  • இளம் சாந்தியாக அனீஷா

 

பாரதி கண்ணம்மா 2 சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

பாரதி கண்ணம்மா 2

சேனல்

ஸ்டார் விஜய் டிவி

ரிலீஸ் தேதி

 06 பிப்ரவரி 2023

ஒளிப்பரப்பு நேரம்

10.00 PM - 10.30 PM [20-22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

பிரவீன் பென்னட்

தயாரிப்பாளர்

வெங்கடேஷ் பாபு, நபில்.எஸ்

எழுத்து

-

எடிட்டிங்

-

ஒளிப்பதிவு 

-

திரைக்கதை

வி.கே.அமிர்தராஜ்

இசையமைப்பாளர்

கிரண்

தயாரிப்பு நிறுவனம்

குளோபல் வில்லேஜர்ஸ்

ஓடிடி தளம்

டிஸ்னி+ஹாட்ஸ்டார்

 

பாரதி கண்ணம்மா 2 சீரியலின் கதை..

கடந்த முறை நகரத்தை மையமாகக் கொண்ட கதை. இம்முறை கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கொலை குற்றவாளியான சித்ராவை அவரது குடும்பமே விரட்டியடிக்க, வேறொரு இடத்திற்கு சென்றுக்கொண்டிருக்க, அப்போது தான் கதையின் கண்ணம்மாவை (ரேஷ்மா முரளிதரன்) பஸ்ஸில் வைத்துச் சந்திக்கிறார். எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் கண்ணம்மா இறந்துவிட, கண்ணம்மாவாக அவருடைய வீட்டிற்குள் நுழைகிறார். மறுபுறம், ஊரில் முக்கிய நபராக இருக்கும் பாரதி வீட்டிற்கு அடங்காத பையனாக ஒரு ரவுடிபோல சுற்றிவருகிறார்.

அவருடைய அம்மா அவனை திருத்துவதற்காக என்னென்னவோ செய்கிறார் ஆனால், அவர் திருந்துவதாக தெரியாவில்லை. அந்த சமயத்தில் தான் கண்ணம்மா(சித்ரா)வை சந்திருக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். இதில் மீண்டும் வெண்பாவே மீண்டும் வில்லியாக வருகிறார். மேலும், பாரதியின் அத்தை குடும்பமே எதிராக இருக்க இவர்களை சமாளித்து கண்ணம்மாவும், பாரதியும் எப்படி திருமணம் செய்திக்கொள்ளப் போகிறார்கள். பின்னர், இது கண்ணம்மா இல்லை உண்மை தெரிய வரும்போது அவரது குடும்பமும், பாரதியும் அவளை ஏற்றுக்கொள்வார்களா என்பது தான் கதைக்களம்.

பாரதி கண்ணம்மா 2 சீரியல் இன்றைய எபிசோட்

பாரதி கண்ணம்மா 2 சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

பாரதி கண்ணம்மா 2 சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, விஜய் டிவி வெளியிடும் பாரதி கண்ணம்மா 2 சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்