Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மீண்டும் வெடிக்கும் அமுதவாணன், விக்ரமன் சண்டை…? பரபரப்பான எதிர்பார்ப்பில் பிக்பாஸ்…!

Editorial Desk Updated:
மீண்டும் வெடிக்கும் அமுதவாணன், விக்ரமன் சண்டை…? பரபரப்பான எதிர்பார்ப்பில் பிக்பாஸ்…! Representative Image.

விஜய் டிவியின் ரசிகர்களுக்கு இன்றைய தேதியில் முக்கிய பொழுதுபோக்காக இருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் தான். மேலும் இந்த பிக்பாஸ் சீசன் -6 ஆரம்பித்த 50-நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் போட்டிகள் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே உண்டு. காலையில் முதல் வேலையாக பிக்பாஸ் ப்ரோமோகாக காத்திருப்பார்கள் என்றே சொல்லலாம்.

நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாக மாறி தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். அந்த வகையில் இன்றைய ப்ரோமோவில் சுவாரஸ்யம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது, இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் ஆயிஷா கதாபாத்திரத்தில் ஏன்.? இப்படிச் செய்… அப்படிச் செய்… என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் என்று விக்கிரமனைப் பார்த்துக் கேட்கிறார்.

அடுத்தாக விக்கிரமனும் ஏடிகேவும் ஒன்றாக அமர்ந்து உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் அமுத வாணனைப் பார்த்து விக்ரம் நீங்கள் ஏன் உங்கள் கதாபாத்திரத்தைத் தவிர்த்து ஏதேதோ செய்கிறீர்கள் என்றும் என்னை அதிகமாக டார்கெட் செய்கிறார்கள் என்று கூறுகிறார். அதற்கு அருகில் இருக்கும் ஏடிகே இதெல்லாம் கதாபாத்திரத்தை வெளிப்படுத்த தான் , எதையுமே செய்யாத என்றால்… என்ன வெங்காயத்தைச் செய்வது என்றவாறு கூறுகிறார்.

இதனால் ஏற்கனவே அமுதவாணனுக்கும் விக்ரமனுக்கும் சண்டைகள் இருக்கும் நிலையில், இந்த ப்ரோமோவின் அடிப்படையில் இன்று ஏதோ பெரிய சம்பவம் காத்திருக்கிறது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் அமைதியாக இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் வெளியேறிய வகையில் இனி போட்டியில் புதிய திருப்பங்களை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். நாம் என்ன எதிர் பார்த்தாலும் அங்கு என்ன நடக்கும் என்பது போட்டியாளர்கள் கையில் தான் உள்ளது. காத்திருந்து இன்றைய எபிசோடை பார்ப்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்