Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,086.15
-402.84sensex(-0.56%)
நிஃப்டி21,868.60
-127.25sensex(-0.58%)
USD
81.57
Exclusive

ஓ இது தான் தனித்து போட்டியிடுவதா..? பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த டாஸ்க்.. இப்ப என்ன சண்டை வரப் போகுதோ..?

Editorial Desk Updated:
ஓ இது தான் தனித்து போட்டியிடுவதா..? பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த டாஸ்க்.. இப்ப என்ன சண்டை வரப் போகுதோ..?Representative Image.

தமிழக மக்களால் மிகவும் விரும்பி இன்றைய நிலையில் பார்க்கப்பட்டுவரும்  முக்கிய நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் என்றால் மிகையில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரமித்து பலவாரங்கள் கடந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் புதிய புதிய டாஸ்குகளை செய்து வருகிறார்கள், அந்த டாஸ்க்கினால் என்ன நடக்குமோ இல்லையோ  சண்டை கண்டிப்பாக நடக்கும் தொடர்ந்து நடக்கும். இந்த சண்டை மிகுந்த பிக்பாஸ் சீசனை மாற்றும் விதமாக இன்றைய ப்ரோமோ அமைந்துள்ளது.

இந்த வாரத்தின் முதல் எபிசோடிலேயே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என்ற அறிவிப்புடன் நாமினேஷன் தொடங்கியது. இதுவே போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி  பார்வையாளர்களுக்கும்  அதிர்ச்சியை உண்டாக்கியது. ஒருவகையில் இந்த வாரம் யார் இரண்டு நபர்கள் வெளியேறப்போகிறார்கள் என்ற ஆர்வத்தையும் தூண்டியது. அடுத்தாக மேலும்  ஆர்வத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் வகையில் இன்றைய ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான டாஸ்க் என்னவென்று வெளியானது.

இந்த வாரத்திற்கான டாஸ்க்காக பிக்பாஸ் அறிவித்துள்ளது "டிவிங்கிள் டிவிங்கிள் பெரிய ஸ்டார்". இதில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தனித்தனி சினிமா கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த கதாபாத்திரத்திலேயே இந்த வாரம் முழுவதும் பயணிக்க வேண்டும். மேலும் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் நடித்து வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களைக் கவர்ந்து தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும்.

இந்த வார டாஸ்க்கின் மூலம் நாம் அறியப்படுவது என்ன வென்றால் ஒவ்வொரு போட்டியாளர்களும் தனித்தனியாக தங்கள் திறமையை நிரூபிக்க முடியும், மேலும் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் யாரும் ஒன்றாகக் கூட்டமாக விளையாடாமல் இருப்பார்கள். இன்றைய எபிசோடை பார்த்தாலே நமக்கு  ஒரு அளவுக்குத்  தெரிந்துவிடும் இந்த வாரம் எப்படி இருக்குமென்று எனவே காத்திருப்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்