Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

BTS RM ராணுவ பயிற்சிக்கு செல்வதாக ரசிகர்ளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் | BTS RM Military Service

Priyanka Hochumin Updated:
BTS RM ராணுவ பயிற்சிக்கு செல்வதாக ரசிகர்ளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் | BTS RM Military ServiceRepresentative Image.

உலகின் மிகப்பெரிய K-pop boy band BTS-ன் லீடர் கிம் நம்ஜூன் [RM] மிலிட்டரி சேவையை மேற்கொள்ளப் போவதாக பதிவு ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

தென் கொரியாவின் சட்டதிட்டங்களின் அடிப்படையில் கட்டாயம் ராணுவ பயிற்சியில் பங்கேற்க வேண்டும். BTS கே-பாப் குரூப்பில் மொத்தம் 7 பேர் உள்ளனர். அதில் கடந்த மாதம் ஜின் தனது மிலிட்டரி சேவையை மேற்கொள்ள சென்று விட்டார். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜே-ஹோப் கட்டாய ராணுவ பயிற்சில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர்களைத் தொடர்ந்து தற்போது BTS குழுவின் தலைவர் RM கூடிய விரைவில் மிலிட்டரி பயிற்சிக்கு செல்லப் போவதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதைப் பற்றி அவர் மிக உருக்கமாக கடித்த எழுத்தி தனது ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். நான் தற்போது இருக்கும் தருணத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் மிலிட்டரி பயிற்சிக்கு செல்வது எனக்கு உற்சாகமாகவும், சற்று பயமாகவும் இருப்பதாக கூறியுள்ளார். நான் நிச்சயம் மிலிட்டரியில் இருக்கும் நாட்களில் என்னை பத்திரமாக பார்த்துக்கொள்வேன். அதே போல் ரசிகர்கள் நீங்களும் உங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களை மறப்பதற்கு முன்பு நாங்கள் உங்களை சந்திக்க வந்து விடுவோம் என்று மிகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்