அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கும் புதிய படமான துணிவு படத்தின் முதல் சிங்கிள் சில்லா சில்லா பாடல் வெளியாகியுள்ளது. இதன் பாடல் வரிகளே வேற லெவலுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது.
ஊரே ச்சில்லா இருக்குறப்ப பாட்டும் ரிலீஸ் ஆகுது. பாட்டு ஸ்டார்ட்டிங் தான் சில்லா சில்லா... ஆனா லிரிக்ஸும் பீட்டும் செம்ம ஃபயரா இருக்கு.
ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை வைசாக் எழுதியிருக்கிறார். அனிருத் குரலில் பாடல் வெறித்தனமாக இருக்கிறது.
#Thunivufirstsingle மற்றும் #ChillaChilla உள்ளிட்ட பல ஹாஷ்டேக்குகளை உருவாக்கி டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
ஏற்கனவே இந்த பாடலிலிருந்து சில பீட்கள் லீக் ஆகி இருந்தும் இந்த பாடலுக்கு இன்னமும் ஹைப் அதிகமானதே தவிர எதிர்பார்ப்பு குறையவே இல்லை.
அஜித்துக்கு யுவன் பாடல்கள் எப்படி அமையுமோ அதுமாதிரி இப்போது ஜிப்ரானும் வெளுத்து வாங்கியிருக்கிறார். இனி தொடர்ந்து அஜித் படங்களில் ஜிப்ரான் இசை அமைவதை பார்க்கலாம். நிச்சயம் அஜித்துக்கு பிடித்தமான ஒரு இசையமைப்பாளராக இருப்பார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…