Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா..!

madhankumar August 12, 2022 & 16:02 [IST]
லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா..!Representative Image.

நடிகையாக இருந்து திரைப்பட இயக்குநராக மாறிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. 'ஆரோகணம்' என்ற அவரது முதல் படத்திற்குப் பிறகு, 'அம்மணி' மற்றும் 'ஹவுஸ் ஓனர்' ஆகியப் படங்களை இயக்கினார் லட்சுமி.இப்போது, ​​அவரது அடுத்தப் படத்துக்காக இளையராஜாவுடன் கைக்கோர்த்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார். இசைஞானியுடன் ரீ-ரெக்கார்டிங்கில் அமர ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதையடுத்து இசைஞானி இளையராஜாவுடன் தான் இருக்கும் படத்தைப் பகிர்ந்து கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன், "புகழ்பெற்ற மேஸ்ட்ரோ படத்தில் இருப்பது பாக்கியம்!என்ன ஒரு அனுபவம் இது!! எனது அடுத்தப் படத்தின் RR அமர்வுகளுக்காக காத்திருக்கிறேன். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்