Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யுவனை காப்பியடித்த அனிருத்! அனிருத்தை காப்பியடித்த யுவன்!

UDHAYAKUMAR August 12, 2022 & 12:45 [IST]
யுவனை காப்பியடித்த அனிருத்! அனிருத்தை காப்பியடித்த யுவன்!Representative Image.

கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள விருமன் திரைப்படத்தில் அனிருத் இசையைக் காப்பியடித்து யுவன் இசையமைத்துள்ளார் என ரசிகர்கள் டிவிட்டரில் பேசி வருகின்றனர். 

சினிமா நடிகர்களின் ரசிகர்கள் சண்டை ஒருபுறம் பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, அவர்களே இசையமைப்பாளர்களுக்காகவும் சண்டையிடும் பழக்கமும் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. அனிருத் இந்த தசாப்தத்தின் மிகப் பெரிய இசை அமைப்பாளராக வீறுகொண்டு எழுந்து நிற்கிறார். இளையராஜா, ஏ ஆர் ரஹ்மானைத் தொடர்ந்து இப்படி ஒரு அசுர வளர்ச்சி அனிருத்துக்குதான் கிடைத்திருக்கிறது. 

யுவன் இசையில் விருமன் திரைப்படத்தின் ஆரம்ப காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி. இது அந்த படத்தோட மியூசிக்ல என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க யாரோ ஒருவர் அதை படம்பிடித்து இணையத்தில் விட்டார். பற்றிக் கொண்டு எரிந்து வருகிறது இந்த செய்தி. 

அனிருத் இசையில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வரும் இசைதான் இது என விஜய் ரசிகர்களும் வரிந்துகட்டிக் கொண்டு களமிறங்கினர். இப்போது யுவன் ரசிகர்கள் அது ஏற்கனவே யுவனின் இசையில் வெளியான சென்னை 28 படத்தில் வரும் இசைதான் என பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்