Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விடுதலை படத்தில் தனுஷ்... வெளியான சூப்பர் அப்டேட்!

UDHAYA KUMAR Updated:
விடுதலை படத்தில் தனுஷ்... வெளியான சூப்பர் அப்டேட்!Representative Image.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து விரைவில் வெளியாக இருக்கும் விடுதலை படத்தில் தனுஷும் பணிபுரிந்துள்ளார் என்கிற செய்தி தனுஷ் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் தனுஷின் வாத்தி பட பாடல்கள் வெளியாகியுள்ளன. கூடவே இசை வெளியீட்டுவிழாவில் தனுஷ் ஏகப்பட்ட அப்டேட்களைக் கொடுத்து ரசிகர்களை குதூகலிக்கச் செய்தார். 

இந்நிலையில், விடுதலை படத்தில் தனுஷின் பங்கு குறித்து தகவல் வெளியானதும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  2004ம் ஆண்டு தனது படத்தில் முதல் பாடலைப் பாடியவர் தனுஷ். நாட்டுச் சரக்கு நச்சுனுதான் இருக்கு எனும் பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர், பின் அடுத்தடுத்து பல பாடல்கள் பாடியுள்ளார். 

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் பாடிய பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்நிலையில், விடுதலை படத்திலும் தனுஷ் பாடியுள்ளார்.இளையராஜா இசையில் தனுஷ் இந்த பாடலை பாடியிருக்கிறார். 

அசுரன் படத்துக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக வைத்து விடுதலை எனும் தலைப்பில் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியும், நாயகன் வேடத்தில் சூரியும் நடித்துள்ளனர். 

இரண்டு பாகங்களாக உருவாகும் விடுதலை படம் பல நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் ஷூட்டிங் முடிந்துள்ளது. இதன்பிறகு விரைவில் படத்தைத் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். புரோமோசன் பணிகளுக்காக படக்குழு அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கும் என தெரிகிறது. 

முதல் பாடல்  தனுஷ் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 8ம் தேதி இந்த பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்னோட நடந்தா எனத் துவங்கும் இந்த பாடல் நிச்சயம் மிகப் பெரிய  அளவில் பேசப்படும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்