Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனுஸ்-ன் கேப்டன் மில்லர் அப்டேட்....அடுத்த பான் இந்தியா படம் ரெடி...!

madhankumar July 02, 2022 & 18:53 [IST]
தனுஸ்-ன் கேப்டன் மில்லர் அப்டேட்....அடுத்த பான் இந்தியா படம் ரெடி...!Representative Image.

நடிகர் தனுஷ் தற்போது தன் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார், அந்த வரிசையில் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் கிரிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள ஹாலிவுட் படமான "தி கிரே மேன்" இந்த மாதம் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள "திருச்சிற்றம்பலம்" வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனையடுத்து தேதிகள் அறிவிக்கப்படாமல் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக "நானே வருவேன்" படம் உள்ளது, செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் "வாத்தி" படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்புகள் நடந்துவருகிறது. படத்தின் வெளியிட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து பல இயக்குனர்களுடன் கைகோர்க்கவிருக்கும் நடிகர் தனுஷின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ  அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

"ராக்கி" "சாணிக்காயிதம்" போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், நல்ல ஐயக்குனர் என்ற பெயரையும் பெற்ற இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் அந்த படம் குறித்த அப்டேட் தன தற்போது வெளியாகியுள்ளது.

1930 மற்றும் 1940களில் நடக்கும் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக உள்ளது என கூறப்படும் இந்த படத்திற்கு "கேப்டன் மில்லர்" (Captain Miller) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த அறிவிப்பு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது, அதில் தனுஷ் முகத்தில் கர்சீப் மாஸ்க் அணிந்துகொண்டு புல்லட்டில் வருவது போன்று அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் என்னவாக நடிக்கவிருக்கிறார் என்ற கேள்வி இப்போதிருந்தே எழுந்துள்ளது. 

இது ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்குமா அல்லது ஒரு புரட்சியாளரின் கதையா என்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் தற்போது எழுந்துள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவில் வரும் BGM வெர்லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படம் மட்டுமில்லாமல் ஜி.வி. பிரகாஷ் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்திற்கும் இசையமைக்கிறார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இந்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்காக போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் முடிய மட்டும் ஒரு ஆண்டுகள் ஆனதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கோலிவுட்டில் இருந்து அடுத்த பான் இந்தியா திரைப்படம் ரெடி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோவில் இந்தப்படம் 2023 ஆம் ஆண்டு கோடைகாலத்தி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்