Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் சர்ச்சையில் ராதாரவி....தமன்னா ரசிகர்கள் கொந்தளிப்பு..!

madhankumar July 02, 2022 & 11:27 [IST]
மீண்டும் சர்ச்சையில் ராதாரவி....தமன்னா ரசிகர்கள் கொந்தளிப்பு..!Representative Image.

பிரபல நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான நடிகர் ராதா  தமன்னா  ஆபாசமான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தமன்னா ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக கருதப்படும் நடிகர் ராதா ரவி 80கல் தொட்டு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு பா.ஜ.க.-வுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரமும் மேற்கொண்டார்.

நடிகர் ராதா ரவி அவ்வப்போது தான் நடித்து முடித்த படங்களின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்வார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் நடித்து முடித்துள்ள "கனல்" படக்குழுவின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, 'கனல்' திரைப்பட நடிகையை புகழ்வது போல், நடிகை தமன்னாவை ஒப்பிட்டு ஆபாசமாக பேசியுள்ளார்.

அதாவது நடிகை தமன்னா உடம்புல கொஞ்சம் கூட கருப்பே இல்ல, ஒரு தடவ ஏர்போர்ட் ல மீட் பண்ணும்போது வணக்கம் வச்சாங்க நானும் சுத்தி சுத்தி பாத்துட்டேன் கொஞ்சம் கூட கருப்பே இல்ல, அதுமறித்தான் இந்த படத்தின் கதாநாயகியும் நல்ல செவப்பா அழகா இருகாங்க கிளாமராத்தான் நடிக்கப் போறாருன்னு நினைச்சேன்.. ஆனா படத்த பார்த்ததும் பெரிய காவியத்தலைவி நடிப்புலையும் அசத்தி இருக்குறாங்க" என்று ராதாரவி பேசியிருந்தார். இவரது இந்த பேச்சு தற்போது கடும் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான "கொலையுதிர்காலம்" படத்தின் செய்தியாளர் சந்திப்பில், முப்பெல்லாம் சாமி வேஷம் போடணும்னா நாங்க கே.ஆர்.விஜயவைதான் தேடுவோம், ஆனால் இப்பொது யார் வேண்டுமானாலும் சாமி வேஷம் போடலாம், கும்பிடுறவங்களும் போடலாம் கூப்பிடுறவங்களும் போடலாம் என கடஉமையான முறையில் விமர்சித்திருந்தார். இதற்கு எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து நயன்தாராவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் ராதாரவி என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்