Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய்யின் தாயார் உடல்நலக்குறைவால் மரணம்.. திரையுலகினர் சோகம்!!

Sekar July 17, 2022 & 15:41 [IST]
விஜய்யின் தாயார் உடல்நலக்குறைவால் மரணம்.. திரையுலகினர் சோகம்!!Representative Image.

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தாயாரும் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குனர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில் அஜித் மற்றும் த்ரிஷா நடித்த கிரீடம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் பொய் சொல்லப் போறோம், மதராசபட்டினம் போன்ற படங்களை இயக்கியதோடு, நடிகர் விஜய் நடிப்பில் தலைவா படத்தை இயக்கினார். 

தலைவா படத்தின் போது அவருக்கும் நடிகை அமலா பாலுக்கும் காதல் ஏற்பட்டு, 2014ல், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

ஆனால் மூன்றே வருடங்களில் இந்த திருமண வாழ்க்கை கசந்த நிலையில், 2017ல் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். பின்னர் 2019ல் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை விஜய் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துருவா விஜய் என்ற மகன் இருக்கிறான். 

இந்நிலையில், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஏ.எல்.விஜய்யின் தாயார் வள்ளியம்மை இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்