Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரீ என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி....எந்த படத்தில் தெரியுமா..?

madhankumar July 17, 2022 & 12:16 [IST]
ரீ என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி....எந்த படத்தில் தெரியுமா..?Representative Image.

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வளர்ந்தவர் ஆவார். இவரும் நடிகர் செந்திலும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் இன்றுவரை பலரின் பேவரைட் படமாக இருக்கிறது. முன்பெண்ணல் தமிழில் ஏதேனும் ஒரு படம் வெளியானால் 10 இல் 8 படங்களில் கவுண்டமணி நடித்திருப்பார். 

இதனையடுத்து இவர் நடிப்பில் கடைசியாக 2016இல் வாய்மை என்ற படத்தில் நடித்தால், அதன் பின்னர் சினிமா வாழ்க்கையில் இருந்து சற்று விலகி ஓய்வில் இருந்துவருகிறார். அவ்வப்போது பட விழாக்களில் தலை காட்டினாலும் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் "மண்டேலா" பட இயக்குனர் மடோன் அஸ்வின் நடிகர் சிவா கார்த்திகேயனை வைத்து "மாவீரன்" என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிமுக வீடியோ வெளியாகி வைரலானது. மேலும் இந்த படத்தின் கூடுதல் தகவலாக நடிகர் கவுண்டமணி இந்த படத்தில் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். 

இதில் சிவகார்த்திகேயனின் பெரியப்பா கதாபாத்திரத்தில் நக்கல் கலந்த குணசித்திர வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்