Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய்யை வைத்து படம் இயக்கும் டான் பட இயக்குனர்...? அவர் சொன்ன பதில் இது தான்..!

madhankumar July 31, 2022 & 15:26 [IST]
விஜய்யை வைத்து படம் இயக்கும் டான் பட இயக்குனர்...? அவர் சொன்ன பதில் இது தான்..!Representative Image.

டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தான் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க உள்ளாரா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல், பைக்கில் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இவர் கடந்த மே மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கல்லூரி கதையம்சம் கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இந்த அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடி வசூல் அடித்தது, இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் அடுத்த படத்திற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அவர் அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் பரவி வந்தன.

இந்த நிலையில் இந்த தகவல் குறித்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார், அதன் படத்தின் கதையை உருவத்தில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கதை முழுவதுமாக தயார் ஆன பிறகு தான் அதற்கு யார் பொறுத்தமாக இருப்பார் என்பதை முடிவு செய்ய உள்ளதாகவும், விஜய்யை வைத்து படம் இயக்க உள்ளதாக பரவி வரும் தகவல் உண்மை இல்லை எனவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்