Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டபுள் செஞ்சுரி அடித்த சிவகார்த்திகேயன்! டான் 100 கோடி நாட் அவுட்!

UDHAYA KUMAR May 25, 2022 & 17:36 [IST]
 டபுள் செஞ்சுரி அடித்த சிவகார்த்திகேயன்! டான் 100 கோடி நாட் அவுட்! Representative Image.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் கல்லூரி கால கதையாக வெளியாகியிருந்த படம் டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். 

நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த படம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டாக்டர் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்திருந்ததால், அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருந்தது.  டாக்டர் திரைப்படமும் காமெடி கலந்த கதை என்பதால் மிகவும் ரசிக்கப்பட்டது. டான் திரைப்படமும் அதுமாதிரியான ஜாலியான படமாக இருக்கும் என எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆனது. 

டான் படத்தை திரையரங்குகளில் பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. வெறும் கல்லூரி கால காட்சிகள் மட்டுமின்றி உணர்வுப் பூர்வமான காட்சிகளையும் கண்டு கண் கலங்கி வெளியே வந்தனர் ரசிகர்கள். இப்படி ஒரு படத்தை காண பெற்றோர்களும் படையெடுத்து தியேட்டர்களில் ஐக்கியமாகினர். இதனால் படம் நாளுக்கு நாள் ஹவுஸ்புஃல்லாக ஓடியது. 12 நாட்களில் 100 கோடி மைல்கல்லை எட்டியுள்ளது. 

இரண்டு வாரங்கள் ஆவதற்குள்ளேயே 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனராம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்