Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Fast & Furious படத்தில் மீண்டும் வருகிறார் தி ராக்...ரசிகர்கள் உற்சாகம் | Dwayne Johnson returns to Fast & Furious Franchise

Priyanka Hochumin Updated:
Fast & Furious படத்தில் மீண்டும் வருகிறார் தி ராக்...ரசிகர்கள் உற்சாகம் | Dwayne Johnson returns to Fast & Furious FranchiseRepresentative Image.

டுவைன் ஜான்சன் 'தி ராக்' மீண்டும் ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் படத்தில் நடிக்க உள்ளதாக வெளியிட்ட தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஹாலிவுட்டில் பல படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ஆனால் கார்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் "ஃபாஸ்ட் & ஃபியூரியஸ்". இப்படத்தில் மிகவும் ஆபத்தான சாகசங்களை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு படமும் வெளியாகிறது. எனவே, இப்படத்திற்கு என்று கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த இரண்டு படங்களாக டுவைன் ஜான்சன் ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் குழுவுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால் அதற்கு பிறகு டுவைன் ஜான்சன் மற்றும் வின் டீசல் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்க மாட்டார்கள் என்று ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து டுவைன் ஜான்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் " வின் டீசலுடன் இருக்கும் பிரச்சனையை மறந்து சமரசமாக போவதாக தீர்மானித்துள்ளோம். அதே போல உலகெங்கிலும் இருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் மீண்டும் ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் படத்தில் நாங்கள் இணைந்து நடிக்க உள்ளோம்" என்றும் கூறினார்.

இதனைக் கண்டு பல ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை கமெண்ட் மூலமாக தெரிவித்து வருகின்றனர். கூடிய விரைவில் ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் படத்தை நாம் எதிர்பார்க்கலாம் என்றும் கொண்டாடுகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்