Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வைரமுத்து குறித்து மு.க.ஸ்டாலின் மௌனம் சாதிப்பது ஏன்? பாடகி சின்மயி தடாலடி | Singer Chinamyi Vairamuthu

Priyanka Hochumin Updated:
வைரமுத்து குறித்து மு.க.ஸ்டாலின் மௌனம் சாதிப்பது ஏன்? பாடகி சின்மயி தடாலடி | Singer Chinamyi VairamuthuRepresentative Image.

பாலியல் தொல்லை ரீதியாக WFI இன் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில், தனக்கும் இப்படி ஒரு பிரச்சனை நடைபெற்றுள்ளது ஆனால் அதற்கு மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள் என்று பாடகி சின்மயி கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாடகி சின்மயி வைரமுத்து அவர்களால் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். அந்த சமயத்தில் இந்த பிரச்சனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்து நடைபெற தொடங்கியது. இருப்பினும் வைரமுத்து அவர்களுக்கு ஆதரவாக தான் அனைவரும் இருப்பதாகவும், தனக்கு நீதி கிடைக்காது என்றும் அவர் பல முறை வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதே போன்று நாட்டிற்காக விளையாடும் மல்யுத்த வீராங்கனையிடத்தில் பாலியல் தொல்லை அளித்ததாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது குற்றச்சாட்டு அளிக்கப்பட்டது. மேலும் அவரை கைது செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பல்லாயிரம் மக்கள் மல்யுத்த வீராங்கனைக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதனைக் கண்ட பாடகி சின்மயி, தனக்கும் இப்படி ஒரு நிலை இருந்ததாகவும், அதற்கு உங்களின் ஆதரவு தராமல் வைரமுத்து அவர்களுக்கு ஆதரவாக மௌனமாக இருப்பது மட்டும் சரியா என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் நான் மட்டும் வைரமுத்து அவர்கள் மீது குற்றம் சாட்டவில்லை, என்னைப் போன்று பல பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளன. அவர்களிடத்தில் செல்வாக்கை காரணம் காட்டி அடிபணிய வைப்பது நியாயமா என்று கேட்டுள்ளார். சுமார் 5 ஆண்டு காலமாக என்னுடைய வழக்கு நீதிமன்றத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. எனக்கு, நீதி கிடைக்க எப்படியும் இன்னும் 20 வருடங்கள் கூட ஆகலாம் என்பதையும் சுட்டி காண்பித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்