Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,188.62
-300.37sensex(-0.41%)
நிஃப்டி21,888.80
-107.05sensex(-0.49%)
USD
81.57
Exclusive

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. வின் டீசலுடன் மீண்டும் இணையும் டுவைன் ஜான்சன்.. | dwayne johnson returns

Nandhinipriya Ganeshan Updated:
'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. வின் டீசலுடன் மீண்டும் இணையும் டுவைன் ஜான்சன்.. | dwayne johnson returnsRepresentative Image.

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் ஹாலிவுட் திரையுலகில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்பட தொடராகும். இந்த திரைப்பட தொடரில் வின் டீசல் [Vin Diesels] முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதுவரை வெளியான அனைத்து பாகங்களுமே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் தொடரின் அடுத்த பாகம் வரும் மே 19 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

இந்த புதிய ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்தில் டுவைன் ஜான்சன் [Dwayne Johnson] லூக் ஹோப்ஸாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எண்ட்ரீ கொடுத்துள்ளார். ஜேசன் மோமோவா, ஜோர்டானா ப்ரூஸ்டர், டைரீஸ் கிப்சன், மிச்செல் ரோட்ரிக்ஸ், லுடாக்ரிஸ், ஜான் செனா, ரீட்டா மோரேனோ, ஹெலன் மிர்ரன், ப்ரி லார்சன், சார்லிஸ் தெரோன், நதாலி இமானுவேல் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் வின் டீசல் ஸ்டாதம் டெக்கார்ட் ஷாவாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மறைந்த பிரபல நடிகர் பால் வாக்கரின் மகளான மீடோவும் ஒரு கேமியோவில் நடித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ஃபாஸ்ட் ஃபைவ் திரைப்படத்தில் வின் டீசலுடன் இணைந்து நடித்திருந்தார் டுவைன் ஜான்சன். ஆனால், வின் டீசலுடன் ஏற்பட்ட சின்ன கருத்து வேறுபாடு காரணமாக டுவைன் ஜான்சன் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். ஆனால், தற்போது ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் கடைசி பாகத்தில் வின் டீசல் மற்றும் ஜான்சன் இருவரும் தங்களது கடந்த காலத்தில் இருந்த வெறுப்பு மற்றும் பகை அனைத்தையும் விட்டுவிட்டு மீண்டும் இணைந்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்