Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

Eeramana Rojave 2 Today Episode: வாட்ச், டெடி மாறி மாறி ஃகிப்ட் தராங்க...இவங்கள பாத்தா டிவோர்ஸ்...வாங்குற மாறி தெரிலையே!

Priyanka Hochumin July 04, 2022 & 18:00 [IST]
Eeramana Rojave 2 Today Episode: வாட்ச், டெடி மாறி மாறி ஃகிப்ட் தராங்க...இவங்கள பாத்தா டிவோர்ஸ்...வாங்குற மாறி தெரிலையே!  Representative Image.

Eeramana Rojave 2 Today Episode: நம்ப வெறும் பிரெண்ட்ஸ் தான்னு சொல்லிட்டு இவங்க பண்ற வேலைய பாத்த செம்ம கடுப்பாகுதுல ப்ரோ. வாங்க இந்த வாரம் என்ன பண்ண போறாங்கன்னு பாப்போம்.

கடந்த வாரம் | Vijay TV Latest Promo 

கடந்த வாரம் இரண்டு ஜோடிகளும் தனி தனியா ட்ரிப் போக, அதுல நிறைய சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்திருக்கு. அது உங்களுக்கும் தெரியும் இருந்தாலும் ஒரு சின்ன ரீகேப். ஜீவா பிரியா ஜோடி ஒரு டீசென்டான கப்பில், பிரியா என்ன கேட்டாலும் அதை மறுக்காமல் செய்யும் ஜீவா. அவங்க குழந்தைகளுடன் ட்ரிப் போக ஜீவா பிரியாவுக்கு இடையில் நெருக்கம் அதிகமாகிட்டே இருக்கு. அதுல ஒரு சீன் தான் பிரியா ஜீவாவை கிஸ் பண்ற சீன். ஒரு சின்ன பையன் கடலுக்குள்ள போகிறான், ஜீவா அவனை காப்பாற்றியதுக்கு பரிசு தான் அந்த கிஸ். ஜீவாவே ஒரு நிமிடம் திகைத்து பொய் நிற்கிறான். இப்படி இவங்க ரொமான்டிக் ஆ இருக்க, அந்த பக்கம் பார்த்தா ஒரே டாம் அண்ட் ஜெர்ரி போல சண்டை தான்.

காவ்யா எக்ஸாம்-க்கு பெங்களூரு போக, பார்த்திபனும் அவளுக்கு தெரியாமல் பின்னாடியே அவளை ஃபாலோ பண்றான். நடுவுல ஒரே கலவரம், அதில் பார்த்திபன் தன்னுடைய மாஸ்ஸான ஆக்ஷன் சீன்லாம் தான் கடந்த வாரத்தில் அதிகம் நடந்தது. வழியில் சின்ன சின்ன சேட்டைகள் செய்யும் காவ்யாவை பார்த்து அணு அணுவாய் ரசிக்கும் பார்த்திபனுக்கு பேக்கிரௌண்ட்ல ஒரே சாங் தான் போங்க. தொட்டதுக்கெல்லாம் பாட்டு போட்ட பாவம் பாக்குறவங்க என்ன ஆகிறது சொல்லுங்க!

Also Read | Baakiyalakshmi Today Episode in Tamil கோபியுடன் ராதிகா இருப்பதை பார்த்து பாக்கியவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

இன்றைய எபிசோடு | Eeramana Rojave 2 Serial 

ஒரு வழியா எல்லா தடைகளையும் தாண்டி பார்த்திபன் காவ்யாவை எக்ஸாம் நாடாகும் இடத்திற்கு கூட்டிட்டு வந்துட்டாரு. காவ்யா நல்லா எக்ஸாம் எழுதணும்னு கோவிலுக்கு போய் அர்ச்சனை பன்னிட்டு திருநீர் கொண்டு வந்து காவ்யா கிட்ட கொடுக்கிறான். காவ்யா சந்தோசத்துடன் எடுத்து அவளின் நெத்தியில் வைக்க, அடுத்து பார்த்திபன் ஒரு பேனாவை பரிசாக கொடுக்கிறான். காவ்யா அதை வாங்கிக்கொண்டு பார்த்திபனுக்கு ஹாண்ட் சேக் செய்துவிட்டு எக்ஸாம் எழுத உள்ளே செல்கிறாள். நல்ல பாடிய எக்ஸாம் முடித்திட்டு வந்த உடன், நான் ஷாப்பிங் செய்யணும் என்னைய மால்-க்கு கூட்டிட்டு போறிங்களா? என்று கேட்டதும் பார்த்திக்கு ஒரே ஷாக். என்னடா இது நாம கூப்பிட்டா இவ வர மாட்ட, இப்ப அவளா வந்து கூப்பிட்றா நல்ல முன்னேற்றம் தான் என்று சிரித்துக்கொண்டே அவளை கூட்டிச்செல்கிறான். அங்கு சென்று பார்த்திக்கு 20,000/- ரூபாய்க்கு ஒரு வாட்ச் வாங்கி தரா. விலைய கேட்ட உடனே உங்களுக்கு திக்குனு ஆகியிருக்குமே, ம்ம் என்ன பண்றது சீரியல்ல இதெல்லாம் சகஜம். பிறகு பார்த்தி காவ்யாவுக்கு ஒரு பெரிய டெடிபியர் பொம்மை வாங்கி தரான். காவ்யா எதுக்கு? என்று கேட்டதும், இல்ல நீ வீட்ல யாருகிட்டயும் ஒழுங்கா பேச கூட மாட்டேங்கிற, இனிமே இந்த பொம்மைய பிரெண்டா நினைச்சிட்டு இதுகூட ஷேர் பண்ணிக்கோ என்று பார்த்தி சொல்கிறான். ஆச்சர்யம் என்ன தெரியுமா? காவ்யா சரின்னு வாங்கிட்டா இனி என்னெல்லாம் நடக்க போகுதோ!

அங்க ஜீவா வேலை முடிசிட்டு வரான், பிரியா அவனுக்கு பரிமாற ஜீவா வேற ஏதாவது இருக்க சாப்பிட என்று கேட்கிறான். ம்ம்! நான் வேண்ணா கலக்கி போட்டு எடுத்துட்டு வரவா? என்று கேட்கிறாள். உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? என்று ஆச்சர்யத்துடன் கேட்கும் ஜீவா. அப்பா கூட வெளிய போகும் போதெல்லாம் நான் கலக்கி சாப்பிடுவேன்னு சொல்ல, பார்குறவங்க எதுக்கு இப்ப இந்த சீன் வச்சாங்கன்னு யோசிப்பீங்க. இருக்கே இதுல பிரியா அவ்ளோ கியூட்டா நடிச்சிருப்பது தான் ஹை-லைட். அவள் இரண்டு பேத்துக்கும் ஆசையா போட்டுட்டு வந்து கொடுக்க, பிரியா ரசிச்சு ருசிச்சு சாப்பிடறத பாத்து ஜீவா மெய்மறந்து சிரிக்கிறான். உங்களுக்கு இன்னொன்னு கொண்டுவரவா என்று கேட்கிறாள், ஜீவா இல்ல போதும் என்று ஆஃப் செய்கிறான். இல்ல எனக்கு இன்னொன்னு சாப்பிடணும் போல இருக்கு, அதான் என்று விழுகிறாள். அவள் முகத்தை பார்த்ததும் மறுக்க முடியாத ஜீவா சரி எடுத்துட்டு வாங்க என்று சொல்கிறான். ஜீவாவின் நடவடிக்கையிலும் ஒரு மாற்றம் தெரிகிறது. பிரியா கொண்டு வந்து குடுக்க, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா காவ்யா பார்த்திபனுக்கு முதல் முறையா ஒரு ஃகிப்ட்வாங்கி கொடுத்துருக்காலம் என்றதும் ஜீவாவின் முகம் மாறுகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.  

Eeramana rojave 2 serial, eeramana rojave 2 today episode, eeramana rojave 2 episodes, vijay tv latest promo, 

உடனுக்குடன் செய்திகளை (Serial Updates) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்