Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல வில்லன் நடிகர் கசன் கான் மரணம் - திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்! | Actor Kazan Khan

Surya Updated:
பிரபல வில்லன் நடிகர் கசன் கான் மரணம் - திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்! | Actor Kazan KhanRepresentative Image.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்த பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பால் காலமானார். 

வில்லன் நடிகர், குணச்சித்திர நடிகர் என பலவிதமான கதாபாத்திரங்களிலும் தனி முத்திரை பதித்த மூத்த நடிகரான கசான் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கேரளாவை பூர்வீகமாகக் கசான் கான், 1992-ஆம் ஆண்டு வெளியான `செந்தமிழ்பாட்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வந்தார். 90-களில் வெளியான பெரும்பாலான தமிழ்ப் படங்களில் வில்லனாக நடித்து, தமிழ் திரைப்பட ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்.

சேதுபதி ஐபிஎஸ், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, வானத்தைப் போல, வல்லரசு, முறைமாமன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் மறக்க முடியான வில்லன் நடிகராக ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்