Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வின் டீசல், ஜேசன் மோமாவின் மிரட்டல்.. ஃபாஸ்ட் எக்ஸ் படம் எப்படி இருக்குது? | Fast X Review in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
வின் டீசல், ஜேசன் மோமாவின் மிரட்டல்.. ஃபாஸ்ட் எக்ஸ் படம் எப்படி இருக்குது? | Fast X Review in TamilRepresentative Image.

ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான படமாக இருப்பது 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' திரைப்படங்கள். கடந்த 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இதுவரை எத்தனையோ பாகங்கள் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில், இந்த படங்களில் முக்கிய ரோலில் வின் டீசல் [டாம்] 20 வருடமாக நடித்து மிரட்டி வருகிறார். ஆனால், இந்த படத்தில் நடித்திருந்த 'பால் வாக்கர்' மரணத்திற்கு பிறகு ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வரிசை படங்கள் வராது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அப்படத்தின் 10வது பாகத்தையே மூன்று பாகங்களாக எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அந்தவகையில், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் 10வது பாகமான 'ஃபாஸ்ட் எக்ஸ்' [Fast X] இன் முதல் பாகம் மே 18 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் ரிலீஸாகி உள்ளது. வின் டீசல், மிட்செல் ரோட்ரிகஸ், ஜான் சினா, ஜேசன் மோமா, ஜோர்டானா ப்ரூஸ்டர், சுங் காங், ஜேசன் ஸ்டேதம், பிரை லார்சன், கால் கடோட், சார்லிஸ் தெரான், டைரீஸ் கிப்ஸன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை டிரான்ஸ்ஃபார்மர் படங்களை இயக்கிய இயக்குநர் லூயிஸ் லெட்டரியர் இயக்கி இருக்கிறார். பிரையன் டைலர் இசையமைத்துள்ள இந்த ஃபாஸ்ட் எக்ஸ் படத்தின் முழுமையான விமர்சனத்தை பார்க்கலாம்.

ஃபாஸ்ட் எக்ஸ் கதை | Fast X Story

டாம் [வின் டீசல்] செய்த ஒரு செயலா டான்டே [ஜேசன் மோமா] அப்பா இறந்துவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த டான்டே டாம் மற்றும் அவரது குடும்பத்தை பழிவாங்குவதற்காக களமிறங்குகிறார். சிரித்துக் கொண்டே கொன்று குவிக்கும் மேட் மேக்ஸ் வில்லனாக வரும் டான்டேவிடம் இருந்து தனது குடும்பத்தை டாம் எப்படி காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் ஃபாஸ்ட் எக்ஸ் முதல் பாகத்தின் கதை. இந்த கதையை தான் சீறிப்பாய்ந்து பறக்கும் கார்களின் பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சிகளுடன் அசத்தலாக படமாக்கியுள்ளார் இயக்குநர்.

ஃபாஸ்ட் எக்ஸ் எப்படி இருக்கு? | Fast X Review

10வது பாகத்திலும் டாம் கேரக்டரில் பக்கவாக நடித்து அசத்தி இருக்கிறார் வின் டீசல். மேலும், இந்த படத்தில் வானத்தில், கடலுக்குள், டேமுக்குள் என அனைத்து இடங்களிலும் கார் ஓட்டி கொண்டு செல்வது போன்ற நம்ப முடியாத காட்சிகளை பிரம்மாண்ட நிலையில் கொண்டு வந்து சிலிர்க்க வைக்கின்றனர். வாடிகன் நகரத்தையே தரைமட்டமாக்க ஒரு பெரிய வெடிகுண்டு பாமை வில்லன் ஏற்பாடு செய்து உருட்டி விட அதில் இருந்து அந்த நகரத்தை ஹீரோ டாம் தனது குடும்பத்தினரை கொண்டு எப்படி காப்பாற்றுகிறார் என்ற அந்த பிரம்மாண்டமான கார் சேஸிங் ஆக்‌ஷன் சீன் மிரட்டும் விதமாக உள்ளது.

படத்தின் ப்ளஸ் பாயிண்ட் என்று பார்த்தால் அரைத்த மாவையே அரைக்காமல் நொடிக்கு நொடி புதிய நடிகர்களின் வருகையோடு, போன சீசன்களில் இடம்பெற்ற ஜேசன் ஸ்டேதம், கால் கடோட் உள்ளிட்ட நடிகர்களின் வருகையும் தான். விஎஃப்எக்ஸ் என்றே தெரியாத அளவுக்கு பல மிரட்டலான காட்சிகள் இடம்பெற்றிருப்பது, வெளிநாட்டு லொகேஷன் என திரையில் ரசிகர்களுக்கு செம்ம விருந்து. அதுமட்டுமல்லாமல், இயக்குநரின் கார்ட்டூன் டைப் ஐடியாக்களுக்கு இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் என அனைவரின் உழைப்பும் படத்திற்கு பெரிய ப்ளஸ்.

மைனஸ் என்று பார்த்தால், அடிக்கடி குடும்பம் தான் முக்கியம், எல்லாரும் ஒண்ணா இருக்கணும் என செண்டிமெண்ட் டைலாக்குகளும், சிரிப்பே வராத காமெடிக்களும் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. என்னதான் செண்டிமெண்டாக இருந்தாலும் இது ஒரு ஹாலிவுட் படம் என்பதை மறந்து மொக்கையான வசனங்களை அள்ளி வீசியுள்ளனர். சுருக்கமாக சொல்லப்போனால், பெரிய பணக்காரங்க வீட்டுக் கல்யாணத்துக்கு போயிட்டு மட்டன் பிரியாணியே போட்டாலும் கறி வேகலைன்னா எப்படி சாப்பிட முடியாதோ அந்த அளவுக்குத் தான் படம் இருக்குது. டிக்கெட் எடுத்தாச்சினு பார்த்துட்டு வரவேண்டியது தான்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்