Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செல்வராகவனின் பகாசூரன் படம் எப்படி இருக்கு? | Bakasuran Movie Review in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
செல்வராகவனின் பகாசூரன் படம் எப்படி இருக்கு? | Bakasuran Movie Review in TamilRepresentative Image.

இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் நடித்து வெளியான படம் 'பகாசூரன்'. இப்படத்தை பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ரதாண்டவம், திரௌபதி என பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ளார். இப்படத்தில் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். நடராஜ், ராதாரவி, ராஜன், மன்சூர் அலி கான், தர்க்ஷ பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். 

கதையில் தன்னுடைய அண்ணன் மகள் மர்மமான முறையில் தற்கொலையை செய்துக்கொள்ள அதற்கான காரணத்தை தேடுகிறார் மேஜர் நட்டி. அந்த காரணத்தை கண்டு மிரண்டுபோன நட்டி இதேபோன்று பாதிக்கப்பட்ட பெண்களை மீட்க அவர்களின் தந்தையை தேடி அழைகிறார். அதே சமயம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தனது மகளின் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்கும், பீமராசுவாக வரும் இயக்குனர் செல்வராகவன் இருவரும் சந்திக்கும் புள்ளியே பகாசுரன் திரைப்படம்.

செல்வராகவனின் பகாசூரன் படம் எப்படி இருக்கு? | Bakasuran Movie Review in TamilRepresentative Image

படத்தில் பின்னணி இசை பிரமாதமாக கொடுத்திருக்கிறார் சாம் சி.எஸ். ஆனால், படத்தின் முதலில் வரும் பாடலை தவிர மற்றவை அனைத்தும் ரசிக்கும்படியாக இல்லை. தன்னுடைய முந்தைய படங்களை விட சிறப்பான படத்தையே கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் மோகன்.ஜி. கதை சரியாக இருந்தாலும் படத்தில் வரும் வசனங்கள் ஆங்காங்கே சரியாக இல்லை. பெண்களை பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்லும் மோகன்.ஜி படத்தில் ஆபாசமான நடனம் பெரிய குறையாக இருக்கிறது.

செல்வராகவனின் பகாசூரன் படம் எப்படி இருக்கு? | Bakasuran Movie Review in TamilRepresentative Image

பிற்போக்கான வசனங்கள் இருந்தாலும் படத்தின் முதல் பாதி பரவாயில்லை, ஆனால் இரண்டாம் பாதியில் பாலியல் தொழிலுக்கு ஆதரவாக இருப்பது காதல் என்பது போல சித்தரித்த விதம் சரியாக இல்லை. படத்தில் தந்தை மகள் பாசம் பாடல் இடம்பெற்றிருக்கிறது. பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டுபவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்காமல் பெண்கள் சரியாக இருந்தால் இது நடக்காது என வெளிப்படையாக சுட்டிக்காட்டியிருக்கிறார் மோகன்.ஜி. அதேபோல, படத்தின் பல இடங்களில் லாஜிக் குறைபாடுகள் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் செல்வராகவனின் நடிப்பு பிரமாதம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்