Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போர் தொழில் படம் எப்படி இருக்கு தெரிஞ்சிக்கோங்க | Por Thozhil Movie Review in Tamil

Priyanka Hochumin Updated:
போர் தொழில் படம் எப்படி இருக்கு தெரிஞ்சிக்கோங்க | Por Thozhil Movie Review in TamilRepresentative Image.

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடித்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'போர் தொழில்' வெளியாகியுள்ளது.

இயக்குனர் - விக்னேஷ் ராஜா

முக்கிய நடிகர்கள் - சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல்

தயாரிப்பாளர் - அப்லாஸ் என்டர்டெயின்மென்ட், E4 எக்ஸ்பரிமென்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டுடியோஸ்

இசை - ஜேக்ஸ் பிஜாய்

ரிலீஸ் தேதி - 9 ஜூன் 2023

ஒளிபரப்பு நேரம் - 2 மணி நேரம் 27 நிமிடம்

ரேட்டிங் - 3.5/5

கதைக்களம்

சீரியல் கில்லிங்கை மையமாக வைத்து வெளியான திரில்லர் திரைப்படம் தான் போர் தொழில். படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன் தனது குடும்பத்தினரின் ஆசைக்காக போலீஸ் ஆகிறான். இருப்பினும் பயந்த சுபாவத்துடன் இருப்பதால் அவரை சரத்குமாரிடம் முக்கிய விஷயங்களை கற்றுக்கொள்ள உயர் அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டார். அந்த தருணத்தில் திருச்சியில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு ஒரே மாறியாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த கேஸை சரத்குமார் மற்றும் அசோகா செல்வன் சேர்ந்து விசாரணை மேற்கொள்ள தொடங்குகின்ட்ட்றனர். இவர்களுக்கு உதவியாக நிகிலா விமலும் அந்த விசாரணையில் சேர்ந்து வேலை செய்கிறார். படத்தின் இறுதியில் யார் அந்த கொலையாளி, ஏன் பெண்களை கடத்தி ஒரே மாறியாக கொலை செய்கிறான் என்பதை கண்டுபிடிப்பார்களா என்பது தான் கதைக்களம்.

ஆக்ட்டிங்

படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மிக அற்புதமாக நடித்துள்ளனர். முக்கியமாக அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இருவரின் குணாம்சம் வெவ்வேறாக இருந்தாலும் படத்தின் இறுதி வரையில் அதில் இருந்து மாறாமல் இருந்தனர். முதல் படமாக இருந்தாலும் இயக்குனர் விக்னேஷ் ராஜா சிறப்பாக கதையை எழுதியுள்ளார். படத்தில் ட்விஸ்டுகளுக்கு பஞ்சமே இல்லை. படம் 2010-ல் நடைபெறுவது போல் இருப்பதால், சில நுணுக்கமான விஷயங்களையும் பார்த்து பார்த்து இயக்கியுள்ளார் விக்னேஷ் ராஜா. படத்திற்கு பலமாக இருந்தது பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் தான். மொத்தத்தில் படம் பார்ப்பதற்கு அருமை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்