Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேற லெவல் வெறித்தனம்...'ஜெயிலர்' படம் எப்படி இருக்கு தெரியுமா? | Jailer Movie Review

Priyanka Hochumin Updated:
வேற லெவல் வெறித்தனம்...'ஜெயிலர்' படம் எப்படி இருக்கு தெரியுமா? | Jailer Movie Review Representative Image.

தமிழக மக்கள் அனைவரும் காத்துக்கொண்டிருந்த தருணம் வந்து விட்டது. இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 'ஜெயிலர்' படம் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கு, ரசிகர்களின் கருத்து என்ன என்பதை பற்றி பாப்போம்.

தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட ரஜினிகாந்தின் முந்தைய படங்கள் என்ன தான் வசூல் வேட்டையில் நன்றாக இருந்தாலும், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதற்கு பின்னர் ஒரு நல்ல கதைக்காக காத்திருந்த ரஜினிக்கு நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் கதை மிகவும் பிடித்திருந்தது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவா ராஜ்குமார், வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகி பாபு உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அனிருஷ் ரவிச்சந்திரனின் இசை படத்திற்கு வேற லெவல் ப்ரோமோஷனை செய்து வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் 'காவாலா' பட்டி தொட்டி முதல் உலகளவில் பரவி இன்று வரை தாக்கம் குறையாமல் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஹுக்கும், ரத்தமாரே ஆகிய பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டு வருடத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் படம் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். தற்போது ஜெயிலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா? நெல்சன் திலீப் குமார் இம்முறையாவது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளாரா? என்பதை பற்றி பார்க்கலாம்.

ஜெயிலர் விமர்சனம்! | Jailer Review

ஜெயிலர் படத்தின் முதல் பாதி தலைவர் மற்றும் யோகிபாபுவின் காமெடி காட்சிகள் நிறைந்ததாக இருக்கிறது. இரண்டாம் பாதி ஆவரேஜ் தான். குறிப்பாக தமன்னா மற்றும் சுனில் வரும் காட்சிகள் போர். இருப்பினும், கிளைமேக்ஸ் காட்சிகள் நிறைய டுவிஸ்ட் உடனும் இருக்கிறது. படத்தில் ஆக்ஷன் சீன் என்று பார்த்தால் ஒரே ஒரு ஆக்‌ஷன் சீன் தான். அதுவும் இடைவேளைக்கு முன் வருகிறது. சிவராஜ்குமார், மோகன்லால், சிறிது நேரம் திரையில் தோன்றினாலும்  மிரட்டியிருக்கின்றனர். அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. ஆக மொத்தம் ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்குமே இது தரமான கம்பேக் படமாக இருக்கும். ஜெயிலர் ஜெயிக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்