Fri ,Jun 14, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கு..? | Ponniyin Selvan 2 Review

Gowthami Subramani Updated:
பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கு..? | Ponniyin Selvan 2 ReviewRepresentative Image.

பல முன்னணி திரையுலகினர் நடித்து இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 1. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் இன்று வெளியானது. பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தின் விமர்சனம் குறித்துப் பார்க்கலாம்.

Ponniyin Selvan Cast விவரங்கள்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் விவரங்களைக் காணலாம்.

விக்ரம் – ஆதித்த கரிகாலன்

ஐஸ்வர்யா ராய் – நந்தினி / ஊமை ராணி

ஜெயம் ரவி – அருள்மொழி வர்மன்

கார்த்தி – வந்தியதேவன்

த்ரிஷா கிருஷ்ணன் – குந்தவை

பிரபு – பெரிய வேலார்

சரத்குமார் – பெரிய பழுவேட்டரையர்

பார்த்திபன் – சின்ன பழுவேட்டரையர்

சோபிதா துலிபாலா – வானதி

ஐஸ்வர்யா லட்சுமி – பூங்குழலி

விக்ரம் பிரபு - பார்த்திபேந்திர பல்லவன்

பிரகாஷ் ராஜ் – சுந்தர சோழன்

ஜெயராம் – ஆழ்வார்க்கடியான் நம்பி

ஜெயசித்ரா – செம்பியன் மாதேவி

ரஹ்மான் – மதுராந்தகன்

அஸ்வின் ககுமானு – சேந்தன் அமுதன்

நாசர் – வீரபாண்டியன்

பொன்னியின் செல்வன் பாகம் 1

கல்கி அவர்களின் வரலாற்றுக் கதையான பொன்னியின் செல்வன் கதையைப் பற்றிக் காணலாம்.

சோழ தேசத்து முடி சூடா மன்னன் மற்றும் இளவரசன் ஆதித்ய கரிகாலன், சோழ தேசத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சூழ்ச்சிகள் சூழப்பட்டுள்ளது அறிகிறார். இதனை ஒரு மடலில் கடிதமாக எழுதி அதனை தனது நண்பனான வந்தியத் தேவனிடம் ஒப்படைத்து, சோழ தேசத்து இளவரசியும், ஆதித்ய கரிகாலனின் தங்கையுமான குந்தவையிடம் சேர்க்க வேண்டும் என கூறுகிறார்.

வந்தியத்தேவன் முக்கிய ஓலைகளை எடுத்துக் கொண்டு, பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து நந்தினி, பழுவேட்டரையரை போன்றோரைச் சந்தித்து பின் குந்தைவையிடம் கடிதத்தைச் சேர்க்கிறார். பதிலுக்குக் குந்தவை, வந்திய தேவனிடம் ஓலை ஒன்றைக் கொடுத்து, அதனை என் தம்பி அருள்மொழி வர்மனை சந்தித்து அவரிடம் ஒப்படைத்து விட்டு கையோடு தஞ்சை அழைத்து வர வேண்டும் என ஆணையிடுகிறார்.

பின், தஞ்சையை அடைந்த வந்திய தேவன், அருள்மொழிவர்மனை சந்தித்து குந்தவை கொடுத்த கடிதத்தை ஒப்படைக்கிறார். ஆனால், இலங்கையில் நடக்கும் பிரச்சனை ஒன்றின் காரணமாக அருள்மொழி வர்மன், தஞ்சைக்கு வர மறுக்கிறார். இதனிடையே, ரவிதாசனின் சூழ்ச்சியால் வந்தியத் தேவன் மற்றும் அருள்மொழிவர்மன் இருவரும் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். பின், மந்தாகினி (ஊமை ராணி), ஆபத்தில் சிக்கியிருந்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகள் அனைத்தும் இரண்டாம் பாகத்தில் வெளிவர உள்ளது.

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் கதையைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் கதை அமையும்.

அருள்மொழி வர்மன், வந்தியத் தேவன் இருவரும் கடலில் விழுந்து மறித்துப் போனதாக, தஞ்சைக்குத் தகவல் கிடைத்ததால், சுந்தரசோழன், குந்தவை உள்ளிட்டோர் மனமுடைந்து போகினர். இந்த செய்தி, ஆதித்த கரிகாலனுக்குத் தெரிய வர, இந்த சூழ்ச்சிக்கு நந்தினி தான் காரணம் என அவளைக் கொல்ல படையோடு கிளம்பி தஞ்சை நோக்கி வருகிறான். அதே சமயம், கடலில் விழுந்த அருள்மொழிவர்மன் மற்றும் வந்தியத் தேவனை ஊமை ராணி காப்பாற்றுகிறாள்.

இன்னொரு பக்கத்தில் மதுராந்தகன், தனக்கு மணிமகுடம் வர வேண்டும் என்ற முனைப்பில் சூழ்ச்சிகள் புரிய ஆரம்பிக்க, மறுமுனையில் தனது முன்னாள் காதலன் ஆதித்த கரிகாலனைக் கொல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறாள் நந்தினி.

இதில் ஆதித்த கரிகாலனை நந்தினி கொலை செய்வார்களா..? மதுராந்தகன் மணிமகுடம் சூடுவார்களா.? அருள்மொழிவர்மன், வானதி திருமணம் நடைபெறுமா..? இறுதியில் மணிமகுடம் யாருக்குச் சென்றது.? போன்ற சில விஷயங்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்களுடன் இடம் பெற்றிருக்கின்றன.

ரேட்டிங்: 9.5/10


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்