Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிலிம்பேர் விருதுகள் 2023: யார் யாருக்கு என்ன என்ன விருது? முழு விவரம்! | Filmfare Awards 2023 Winners List

Nandhinipriya Ganeshan Updated:
பிலிம்பேர் விருதுகள் 2023: யார் யாருக்கு என்ன என்ன விருது? முழு விவரம்! | Filmfare Awards 2023 Winners ListRepresentative Image.

பாலிவுட்டில் பிலிம்பேர் விருது மிகவும் பிரபலமான ஒன்று. அந்தவகையில், 68வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று [ஏப்ரல் 27,2023] மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷனல் சென்டரில் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை சல்மான் கான் முதல் முறையாக தொகுத்து வழங்கினார். இவருடன் ஆயுஷ்மான் குரானா மற்றும் மணீஷ் பால் ஆகியோரும் இணைந்து தொகுத்து வழங்கினர். விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் திரளாகக் கலந்து கொண்டனர். பல வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கொடுக்கப்படும் ஒரு விருது. ஒவ்வொரு கலைஞர்களும் இந்த மதிப்புமிக்க பிளாக் லேடி டிராபியை பெறுவதற்காக போட்டிக் போட்டுக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள். இந்த விருதை வாங்குவதே பலரின் கனவாகவும் இருக்கிறது. அந்தவகையில், 2023 ஆம் ஆண்டிற்கான பிலிம்பேர் விருதை தட்டிச்சென்ற வெற்றியாளர்கள் யார் என்பதை பார்க்கலாம். 

பிலிம்பேர் வெற்றியாளர்கள் 2023:

➦ சிறந்த திரைப்படம் - கங்குபாய் கதயவாடி

➦ சிறந்த திரைப்படம் [விமர்சகர்கள்]: படாய் தோ

➦ ஒரு முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் [ஆண்]: ராஜ்குமார் ராவ் [படாய் தோ படத்திற்காக]

➦ ஒரு முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் [பெண்]: ஆலியா பட் [கங்குபாய் கதியவா படத்திற்காக]

➦ சிறந்த நடிகர் [விமர்சகர்கள்]: சஞ்சய் மிஸ்ரா [வாத் படத்திற்காக]

➦ சிறந்த நடிகை [விமர்சகர்கள்]: பூமி பெட்னேகர் [பதாய் தோ படத்திற்காக] மற்றும் தபு [பூல் புலையா 2 படத்திற்காக]

➦ சிறந்த இயக்குனர்: சஞ்சய் லீலா பன்சாலி [கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக]

➦ சிறந்த துணை நடிகர் [ஆண்]: அனில் கபூர் [ஜக் ஜக் ஜீயோவுக்காக]

➦ சிறந்த துணை நடிகர் [பெண்]: ஷீபா சத்தா [பதாய் தோ படத்திற்காக]

➦ சிறந்த இசை ஆல்பம்: ப்ரீதம் சக்ரவர்த்தி [ப்ரீதம் பிரம்மாஸ்ட்ரா: முதல் பாகம் - சிவா படத்திற்காக]

➦ சிறந்த உரையாடல் [Dialogue]: பிரகாஷ் கபாடியா மற்றும் உத்கர்ஷினி வசிஷ்தா [கங்குபாய் கதியவாடி படத்திற்காக]

➦ சிறந்த திரைக்கதை: அக்ஷத் கில்டியல், சுமன் அதிகாரி மற்றும் ஹர்ஷவர்தன் குல்கர்னி [பதாய் தோ படத்திற்காக]

➦ சிறந்த கதை: அக்ஷத் கில்டியல் மற்றும் சுமன் அதிகாரி [பதாய் தோ படத்திற்காக]

➦ சிறந்த அறிமுகம் [ஆண்]: அங்குஷ் கெடம் [ஜுண்ட் படத்திற்காக]

➦ சிறந்த அறிமுகம் [பெண்]: ஆண்ட்ரியா கெவிசூசா [அனெக் படத்திற்காக]

➦ சிறந்த அறிமுக இயக்குனர்: ஜஸ்பால் சிங் சந்து மற்றும் ராஜீவ் பர்ன்வால் [வாத் படத்திற்காக]

➦ வாழ்நாள் சாதனையாளர் விருது: பிரேம் சோப்ரா

➦ சிறந்த பாடல் வரிகள்: அமிதாப் பட்டாச்சார்யா [ப்ரீதம் பிரம்மாஸ்ட்ரா: முதல் பாகம் - சிவா படத்தில் வரும் கேசரியா பாடலுக்காக]

➦ சிறந்த பின்னணி பாடகர் [ஆண்]: அரிஜித் சிங் [ப்ரீதம் பிரம்மாஸ்ட்ரா: முதல் பாகம் - சிவா படத்தில் வரும் கேசரியா பாடலுக்காக]

➦ சிறந்த பின்னணிப் பாடகி [பெண்]: கவிதா சேத் [ஜக் ஜக் ஜீயோ படத்தில் வரும் ரங்கிசாரி பாடலுக்காக]

➦ வரவிருக்கும் இசைத் திறமைக்கான ஆர்.டி.பர்மன் விருது: ஜான்வி ஸ்ரீமான்கர் [கங்குபாய் கத்தியவாடி]

➦ சிறந்த எடிட்டிங்: நினாத் கானோல்கர் [ஆன் ஆக்ஷன் ஹீரோ படத்திற்காக - An Action Hero]

➦ சிறந்த ஆடை வடிவமைப்பு: ஷீத்தல் ஷர்மா [கங்குபாய் கதியவாடி படத்திற்காக]

➦ சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: சுப்ரதா சக்ரவர்த்தி மற்றும் அமித் ரே [கங்குபாய் கதியவாடி]

➦ சிறந்த ஒலி வடிவமைப்பு: பிஷ்வதீப் தீபக் சட்டர்ஜி [பிரம்மாஸ்ட்ரா: முதல் பாகம் - சிவா படத்திற்காக]

➦ சிறந்த பின்னணி இசை: சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா [கங்குபாய் கதியவாடி படத்துக்காக]

➦ சிறந்த நடன அமைப்பாளர்: க்ருதி மகேஷ் [கங்குபாய் கதியவாடி படத்தில் வரும் தோலிடா பாடலுக்காக]

➦ சிறந்த ஒளிப்பதிவு: சுதீப் சட்டர்ஜி [கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக]

➦ சிறந்த செயல்: பர்வேஸ் ஷேக் [விக்ரம் வேதா படத்திற்காக]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்