மக்களின் மனதைக் கவர்ந்த பல்வேறு சின்னத்திரை தொடர்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல்கள் ஏராளமானவை உள்ளன. அவற்றில் சன்டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்றவை பெரும்பாலும் சின்னத்திரை தொடர்களுக்குப் பெயர் போனவை ஆகும். வித்தியாசமான கதைக்களத்தால், ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை அளிக்கும் வண்ணம் இந்த தொலைக்காட்சி தொடர்கள் அமையும்.
இந்த சின்னத்திரை நடிகர், நடிகைகளை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு சேனல்களும் தனித்தனியே விருதுகளை வழங்கி சிறப்பிக்கும். அந்த வகையில், இதுவரை 7 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சி விருதுகள் நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான விஜய் டிவி விருதுகள் 2023-க்கான அறிவிப்பை இதில் பார்க்கலாம்.
விஜய் தொலைக்காட்சி விருதுகள் 2023
2023 ஆம் ஆண்டிற்கான விஜய் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த திறமையாளர்களைக் கௌரவிக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியில், சிறந்த நடிகர், நடிகைகள், துணை நடிகர், துணை நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
விஜய் டிவி அவார்ட்ஸ் 2023
தற்போது விஜய் டிவியின் 8 ஆம் ஆண்டு விருது விழா கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இது விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…