Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அஜித்தைத் தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணையும் ஹெச். வினோத்!

UDHAYAKUMAR August 01, 2022 & 13:43 [IST]
அஜித்தைத் தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணையும் ஹெச். வினோத்!Representative Image.

அஜித் குமார் நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி சராசரி வரவேற்பைப் பெற்றது. சரியான திட்டமிடல் இல்லாதது, பல நாட்கள் தாமதம் உள்ளிட்ட காரணங்களுடன் வேறு சில காரணங்களாலும் படத்தின் வெற்றி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அஜித்தை வைத்தே அடுத்த படத்தையும் இயக்கி வருகிறார் ஹெச் வினோத். இந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில், இவருக்கு பிறகு யாருடன் இணைவார் என்கிற கேள்வி எழுந்தது. 

அஜித்தின் படத்தை அடுத்து உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணையவுள்ளார் ஹெச் வினோத் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை உறுதி செய்யப்படாத தகவலாக இது இருந்தாலும், லோகேஷுக்குப் பிறகு மேலும் ஒரு இளம் இயக்குநருடன் இணைவதில் உறுதியாக இருக்கிறார் கமல்ஹாசன். அதில் முன்னுரிமை வினோத்துக்குத்தான் என்கிறார்கள் விவரம் அறிந்த கோலிவுட் வட்டாரத்தினர். 

விக்ரம் மாதிரி வேற லெவலுக்கு ஹிட் ஆகும் ஒரு படத்தைத் தர காத்திருக்கிறாரா ஹெச் வினோத். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருக்கலாம். மேலும் பல சினிமா அப்டேட்களைத் தெரிந்துகொள்ள SEARCH AROUND WEB இணையதளத்துடன் இணைந்திருங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்