Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெட்க புன்னகை முகத்தில் மின்ன; திருமண கோலத்தில் நடிகை ஹன்சிகா! 

Kanimozhi Updated:
வெட்க புன்னகை முகத்தில் மின்ன; திருமண கோலத்தில் நடிகை ஹன்சிகா! Representative Image.

குட்டி குஷ்பு என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஹன்சிகா தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் கொடி கட்டி பறந்தார். தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படம் மூலமாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, ’எங்கேயும் காதல்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ , சேட்டை, தீயா வேலை செய்யனும் குமாரு, வாலு, அரண்மனை 1 அண்ட் 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். 

நடுவில் ஹன்சிகாவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் எதுவும் அமையவில்லை, எனவே சோசியல் மீடியாவில் போட்டோ ஷூட் நடத்தி வந்த ஹன்சிகா, வழக்கமான நடிகைகளின் பாணியிலேயே தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். தனது தோழியின் முன்னாள் கணவரான சோஹைல் கதூரியா என்ற மும்பை தொழிலதிபரை நாளை ஜெய்ப்பூரில் உள்ள கோட்டையில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். 

வட இந்திய திருமணம் என்பதால் கடந்த 4 நாட்களாகவே ஹன்சிகா - கதூரியா திருமண விசேஷங்கள் களைக்கட்டியுள்ளது. சங்கித் நிகழ்ச்சியை முன்னிட்டு ’புதுசா ஒரு வெட்கம் முளைக்குது..’ என்ற பாடலுக்கும் மணமக்கள் ஆட்டம் போடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திருமண பூரிப்புடன் தேவதையாய் மின்னும் ஹன்சிகா முகம் முழுக்க புன்னைகையுடன் நடமாடும் வீடியோ இன்ஸ்டாவில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்