Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வடிவேலுக்கு டாக்டர் பட்டம்.. குவியும் ரசிகர்களின் பாராட்டுக்கள்.. | Actor Vadivelu

Nandhinipriya Ganeshan Updated:
வடிவேலுக்கு டாக்டர் பட்டம்.. குவியும் ரசிகர்களின் பாராட்டுக்கள்.. | Actor VadiveluRepresentative Image.

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. நடிகர், பாடகர் என பல கலைத்திறமைகளை தன்னுள் ஒளித்துவைத்திருக்கும் வடிவேலு 1988 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா திரையுலகில் கால்பதித்தார். அதைத்தொடர்ந்து இவர் நடித்த அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், வசூலையும் அள்ளிக் குவித்தது. ரஜினி, கமல், விஜய், அஜித், பிரபு, விக்ரம், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் படத்திலும் காமெடியனாக நடித்து தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிவைத்துள்ளார்.

வடிவேலுக்கு டாக்டர் பட்டம்.. குவியும் ரசிகர்களின் பாராட்டுக்கள்.. | Actor VadiveluRepresentative Image

இவர் நடித்த அனைத்து கதாபாத்திரமும் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. காமெடியனாக மட்டுமல்லாமல், நடிகராகவும் சில படங்களில் நடித்துயிருக்கிறார். அதிலும், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தை இன்றளவும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு அப்படத்தில் காமெடிக்கு பஞ்சம் என்பதே இருக்காது. மேலும், 24 ஆம் புலிகேசி படத்தை எடுக்கும்போது தான் வடிவேலுக்கும், இயக்குநர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை வலுத்து தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு போட்டது.

வடிவேலுக்கு டாக்டர் பட்டம்.. குவியும் ரசிகர்களின் பாராட்டுக்கள்.. | Actor VadiveluRepresentative Image

இதனால், பல வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். ஆனால், இந்த படம் பெரும் தோல்வியை தழுவிய நிலையில், மனம் தளராத வடிவேலு தற்போது பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வடிவேலுக்கு டாக்டர் பட்டம்.. குவியும் ரசிகர்களின் பாராட்டுக்கள்.. | Actor VadiveluRepresentative Image

இந்த நிலையில், வைகை புயல் வடிவேலுவுக்கு 'கௌரவ டாக்டர் பட்டம்' வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கிவரும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம், ஆண்டுதோறும் சமூக அக்கறையும், பொறுப்புர்ணர்வுடன் செயல்பட்டு வரும் பிரபலங்களுக்கு விருது தந்து கௌரவப்படுத்தி வருகிறது.

வடிவேலுக்கு டாக்டர் பட்டம்.. குவியும் ரசிகர்களின் பாராட்டுக்கள்.. | Actor VadiveluRepresentative Image

அந்தவகையில், இந்த ஆண்டு நடிகர் வடிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் தந்து கௌரவப்படுத்தியுள்ளது. வடிவேலுவுக்கு, 'பொழுதுபோக்கு' என்ற பிரிவின் கீழ் இந்த விருதை வழங்கியுள்ளது. இதனை பெற்ற வடிவேலு படிக்க தெரியாத எனக்கு படித்தவர்களின் கையால் முணர்வர் பட்டம் வாங்குவதில் மகிச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதையடுத்து பலரும் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்