Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த "துணிவு" நடிகர் ரமேஷ்.. பிறந்த நாளில் சோகம்!!

Sekar Updated:
மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த Representative Image.

இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து பிரபலமடைந்த நடன கலைஞர் ரமேஷ் என்பவர் நேற்று தனது பிறந்த நாளில், மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பில் வசித்து வரும் நடன கலைஞர் ரமேஷ், இன்ஸ்டாவில் நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். இதன் மூலம் பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற் வாய்ப்பு கிடைத்தது.

அங்கும் தனது நடன திறமையை வெளிக்காட்டி பாராட்டுகளை பெற்ற ரமேஷ், அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு மற்றும் ரஜினி நடிப்பில் வெளிவர உள்ள ஜெயிலர் படத்திலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். 

நேற்று அவரது பிறந்த நாளில், திடீரென தனது குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது திரையுலகினர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரமேஷ் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்